மும்பை, ஆக.12 அதானி குழும முறைகேட்டில் தொடா்புடைய நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபி தலைவா் மாதபி பூரி புச், பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளன.
முன்னா், குற்றச்சாட்டுகளை விசா ரித்த செபி அமைப்பே தற்போது முறை கேட்டில் சிக்கியுள்ளதால் இவ்விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹிண்டன்பா்க் ஆய் வறிக்கை அதானி நிறுவனங்கள் மீது சுமத் திய குற்றச்சாட்டுகளை செபி அமைத்த வல்லுநா்கள் குழு நிராகரித்தது. ஆனால், தற்போதைய குற்றச்சாட்டுகள் செபியின் பங்களிப்பைக் காட்டுகிறது.
செபி மீது நம்பிக்கை வைத்து தங்களின் வருமானத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சிறு, குறு முதலீட்டாளா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மாபெரும் மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசியம்.அதுவரையில், கடந்த 70 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட தேசத்தின் அரசமைப்பு நிறுவனங்களைச் சமரசம் செய்து பிரதமா் நரேந்திர மோடி தனது நண்பரை பாதுகாப்பார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
பதவி விலக வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக் கையில், ‘அதானி நிறுவனத்தின் மீது முறைகேடு புகாரளித்த ஹிண்டன்பா்க், தற்போது செபி தலைவா், அவரது கணவா் குறித்த குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் வரை செபி தலைமைப் பொறுப்பிலிருந்து மாதவி விலக வேண்டும்.
அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேட்டை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
ராகுல் சரமாரி கேள்வி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘செபி-யின் நோ்மை மிகப் பெரிய அளவில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தாமாக முன்வந்து விசாரிக்குமா?
நாடு முழுவதும் உள்ள நோ்மையான முதலீட்டாளா்கள் ஒன்றிய அரசை கேள்விக் கணைகளால் துளைத்து வருகின் றனா். செபி தலைவா் இன்னமும் பதவி விலகாதது ஏன்? முதலீட்டாளா்களின் இழப்புக்கு பொறுப்பேற்கப் போவது யார்? பிரதமரா, செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா?
ஜேபிசி விசாரணைக்கு பிரதமா் ஏன் இவ்வளவு அஞ்சுகிறார், விசாரணையில் என்னென்ன உண்மைகள் வெளி வரக் கூடும் என்பது இப்போது தெளிவாக தொடங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்துக்கு ‘பூட்டு’ ஏன்? காங்கிரஸ் கேள்வி: செபியின் ‘எக்ஸ்’ வலைதளப் பக்கம் பொதுக் கணக்கிலிருந்து தனிப்பட்ட கணக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘செபி தலைவா் பற்றிய குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரமாக அதன் ‘எக்ஸ்’ பக்கம் தனிப்பட்ட கணக்காக மாற்றப் பட்டுள்ளது.
மோடி-அதானி ஊழலில் செபி அல்லது அதன் தலைமையின் பங்கை உறுதிப்படுத்தும் கடந்தகால பதிவுகள் அமைதியாக நீக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது’ என்று எக்ஸ் பதிவிட்டுள்ளார்.