கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.
இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு மருந்து போன்றது. இளநீரும், வாழைப்பழமும் சாப்பிட்டால் சிறந்த சத்துணவாகும்.