திருச்செந்தூர், ஆக.12- திருச் செந்தூரில் நேற்று (11.8.2024) கடல் சீற்றமாக காணப்பட்டது. அப்போது எழுந்த ராட்சத அலை யில் சிக்கி பக்தர் களுக்கு கால் முறிந்தது.
நேற்று பகலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் பகுதியில் அலையின் சீற்றம் சற்று அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் நீராடினர். சேலத்தை சேர்ந்த தங்கம் (வயது 52), புதுக்கோட்டையை சேர்ந்த பாகம்பிரியா (39). கோவையை சேர்ந்த வெங்கடேசன் (56) ஆகியோரும் தங்களது குடும்பத்தினருடன் கடலில் நீராடினார்கள். அப்போது, திடீரென்று எழுந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் களின் காலில் எலும்பு முறிவு ஏற் பட்டதுடன் தண்ணீரிலும் இழுத்து செல்லப்பட்டனர். இதனை கண்டதும் அங்கு கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், ஆறுமுக நயினார். இசக் கிமுத்து, ராமர் ஆகியோர் ஓடி வந்தனர். கடலுக்குள் இறங்கி 3பேரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.