சென்னை, ஆக.12- தமிழ்நாடு அரசு சார்பில், பெண்களுக்கான கல்வி உதவித்தொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் உள் ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாற்றுத் திற னாளிகளுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் போன் (திறன்பேசி) வழங்கும் திட்டத்திற்கு விண் ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென் சென்னை எல்லைக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட செவித் திறன் குறைபாடுள்ள / பார்வை யற்றோருக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்கு. மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.
தகுதிகள் என்ன?
1. செவித்திறன் குறைபாடுள்ள வர்கள் / பார்வையற்றோர் 80% 100% தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
2. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், தனியார் துறையில் பணி புரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் மாற்றுத் திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
3. டிப்ளமோ/பாலிடெக்னிக் அய்டிஅய் பயிற்சி முடித்த 18 வயது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் ஊனமுற்றவராக இருக்கக்கூடாது.
5. அதிகபட்ச வயது வரம்பு 70. எனவே, சென்னையைச் சேர்ந்த மேற்கண்ட தகுதிகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது விவரங்களை https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைய முகவரியில் 19.08.2024 தேதிக்குள் இ-சேவை மய்யம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.