நாகப்பட்டினம், ஆக.12 வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
வக்பு வாரிய சட்டத் திருத்தம் என்பது அச்சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடியது. கடந்த காலங்களில் கோயில்களுக்கும், தர்காக்களுக்கும் அரசர்கள் பலரும் நிலங்கள், செல்வங் களை வழங்கியுள்ளனர். அதேபோன்று கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தற்போ தும் அரசு நிதி வழங்குகிறது.
வக்பு வாரிய சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல. சட்டத் திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முஸ்லிம் லீக் எம்.பி.க்களுக்கு இடமளிக்கவில்லை. வக்புவாரியமே இல்லாமல் ஆக்குவதற்கான சட்டம் இது. இந்தியாவில் முஸ்லிம்கள் வாழக் கூடாது என நினைக்கிறார்கள். எனவே, வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.