12.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உ.பி. மாநிலத்தில் நடைபெற உள்ள 10 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தயார்; ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது; ஹிந்துத்வாவை பாஜக கையில் எடுக்கும் என தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘வக்ஃப் மசோதாவின் 40 பிரிவுகள் முஸ்லிம்களுக்கு தீங்கானது… அனைத்தும் நீர்த்துப்போகின்றன’ என்கிறார் என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச கட்சியின் சிறுபான்மை குழு தலைவர் பதுல்லா முகமது.
* அரசமைப்பு சட்டம் சஞ்சீவனி, ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆக்சிஜன் என்கிறார் அகிலேஷ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆர்எஸ்எஸ், ஹிந்துத்துவாவை செயல்படுத்த முயற்சிக்கிறது என்று மணிப்பூர் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* அயோத்தியில் பாஜக தோல்வி – உலகம் முழுவதும் கேலிப் பொருளான பாஜகவிற்கு அயோத்தி எம்.பி. தொகுதிக்குட்பட்ட மில்கிபூர் சட்டமன்ற இடைத் தேர்தல் ஓர் சவாலாக வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் பதவி விலகவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பேற்பார்கள்? செபி தலைவரா? பிரதமர் மோடியா? அதானியா?” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
– குடந்தை கருணா