தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

Viduthalai
3 Min Read

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் ஆக.12, 13 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ளதாவது,

ஆக.12-இல், கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆக.13-இல் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடலில் ஆக.11-13 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு
வங்கியில் வேலை வாய்ப்பு

தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (அய்.பி.பி.எஸ்)
காலி பணி இடங்கள்: 4,455 (சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா-200, கனரா வங்கி-750, பேங்க் ஆப் இந்தியா – 885, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி -260, பஞ்சாப் நேஷனல் வங்கி-200, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி -360 உள்பட பல்வேறு வங்கிகள்)
பதவி: புரோபஷனரி ஆபீசர், மேனேஜ்மெண்ட் டிரெய்னி
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப் படிப்பு
வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி குறைந்த பட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 30.அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு- சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர் கோவில்/கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாத புரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி
மெயின் தேர்வு (தமிழ்நாடு): சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி.
முதல் நிலைத்தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர்
மெயின் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2024
இணைய தள முகவரி: https://www.ibps.in/index. php/management-trainees-xiv

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

காலி பணி இடங்கள்: 654 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் 2 தேர்வு)
பதவி: உதவி பொறியாளர், வேளாண் அதிகாரி, கட்டடக்கலை உதவியாளர், ஜூனியர் கட்டட வடிவமைப்பாளர், உதவி புவியியலாளர், வேதியி யலாளர், நூலகர், நூலக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள்
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., பி.எல்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., முதுகலைப்படிப்பு உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள்.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு (நேர்காணல் கிடையாது)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-8-2024
இணையதள முகவரி : https://www.tnpsc.gov.in/English/Notification.asp

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக.11- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அருகே அதன் நகல்களை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி முன்னிலை வகித்தார். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *