சென்னை, ஆக.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் (M.M.C.) முதன் முறையாக பி.எச்.டி., பட்டத்திற்கான பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். ஒரு மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும் சென்னை மருத்துவக் கல்லூரியால் பரிந்துரைக்கப்பட்ட தலைப்பு கள் சிறப்பாக இருந்ததன் காரண மாக சிறப்பு அனுமதி கொடுத்து நான்கு மருத்துவர்களுக்கான ஆராய்ச்சி வாய்ப்பை அய்.சி.எம்.ஆர். வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டு மின்றி உலக அரங்கிலும் தமிழ்நாட்டின் சிறப்பான மருத்துவ சேவை கள் வழங்கப்படுகின்றன. தற்போது 189 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி தற்போது பி.எச்.டி. ஆய்வினை தொ டங்கி சாதனை படைத்துள்ளது. இச்சாதனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது. முனைவர் பட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மருத்துவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த மகத்தான சாதனைக்கு காரணமான சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்து வர்கள், ஊழி யர்கள் என அனைவருக்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக் களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் சக்தியோ சக்தி
கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு
மாடு முட்டி பத்து பக்தர்கள் காயம்
திருவாடானை, ஆக. 11 ராமநாதபுரம் மாவட்டம், பாண்டுகுடி அருகே கிராமத்தில் 7.8.2024 அன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் மாடு முட்டியதில் பார்வையாளா் உயிரிழந்தார்.
திருவாடானை வட்டம், பாண்டுகுடி அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தில் சிறீமகாலிங்க மூா்த்தி, ஆகாச அய்யனார் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மறவமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இந்த மஞ்சுவிரட்டைப் பார்ப்பதற்காக வந்த ஆதியூரைச் சோ்ந்த பாக்கியம் (50) மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாடானை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து
24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், ஆக.11 கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து 2 அணைகளில் இருந்தும் தமிழ்நாடு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன்படி 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதன்படி 9.8.2024 அன்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பிலிகுண்டு காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், அய்ந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி 26-ஆவது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழ்நாடு கருநாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவல்துறையினர் வருவாய்த்துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.