கன்னியாகுமரி, ஆக.11- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
பகுத்தறிவு விழிப்பு ணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், கழக மாவட்ட கலை இலக்கிய அணிச்செயலாளர் பா.பொன்னுராசன், நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.இராஜசேகர், மாவட்ட கழக தோவாளை ஒன்றிய செயலாளர் வீராணமங்கலம் மா. ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் ஆரல்வாய் மொழி ம.தமிழ்மதி, சுசீந்திரம் அரிஷ், கோட் டாறு பகுதி கிளைக்கழக தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்சு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூடநம்பிக்கை ஒழிப்பு சிந்தனைகள், தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத் துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்து அறிவுத் தெளிவு பெற்றனர்.