பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் கோயிலா – கும்பாபிஷேகமா?
அப்பட்டமான விதிமீறல்!
விருத்தாசலம் அருகே, பள்ளிப்பட்டுக் கிராமத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் விநாயகர், ஓம் சக்தி கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதுபோல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் சொந்த ஊரான, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ‘‘கழுதூர்’’ கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திலும் ஓம் சக்தி கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்த மத வழிபாட்டுச் சின்னமும் இருக்கக் கூடாது என்பதுதான் விதி. இந்த நிலையில், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகம் செய்யப்பட்டதும் எப்படி?
அனுமதி கொடுத்தது யார்?