கள்ளக்குறிச்சி, ஆக. 10- கடந்த பிப்ரவரி மாதத்தில் இணைய வழியில் பெரியார் 1000 வினாடி வினாத் தேர்வு,கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் மேட்டை உள்பட பல பள்ளிகளில் நடத்தப்பட்டது.
5.08.2024 அன்று இப்பள்ளியில் தேர்வு எழுதியஅனைத்து மாணவி களையும் ஊக்குவிக்கும் வகையில்,பேனாக்கள் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், பள்ளித் தலைமை ஆசிரியர் மணிமேகலை, பள்ளி யின் மேனாள் முது கலை பட்டதாரி தாவரவியல் ஆசிரியர் அரிமா சம்பத்,கழகப் பொறுப்பாளர்கள் மு.இளங்கோவன், சி.அய் யனார், பா.சக்தி, வை. சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசினர் உயர்நிலைப் பள்ளி முருக்கம்பாடி, கல்லக்குறிச்சி மாவட்டம்.
கல்லகுறிச்சி மாவட்டம் முருக்கம்பாடி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் மாலு, கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி கழக மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாராட்டு
Leave a Comment