கழகக் களத்தில்…!

4 Min Read

11.8.2024 ஞாயிற்றுக்கிழமை
வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா குழு மற்றும் பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும் இலவச இருதய மருத்துவ முகாம்
செய்யாறு: காலை 9 மணி * இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு * பங்கேற்கும் மருத்துவர்கள்: டாக்டர் என்.பரத்குரு, டாக்டர் டி.தியானேஸ்வர், டாக்டர் என்.விஜயலட்சுமி, டாக்டர் ஏ.ஜெயக்குமார் * முகாமிற்கு வர விரும்புவோர் முன்பதிவு செய்வது நல்லது, முன்பதிவு செய்பவர்களுக்கு வரிசையில் முன்னுரிமை அளிக்கப்படும், மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் தேவைப்படுவோருக்கு இசிஜி மற்றும் எகோ இலவசமாக செய்யப்படும் *தங்கள் பழைய மருத்துவ அறிக்கைகளை கொண்டு வரவும் * இப்படிக்கு: வேதா மருந்தகம் – 9094054436, படிகலிங்கம் மருந்தகம் – 9123523929, ஏ.எம்.மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் – 93448 55992.

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் (மாவட்ட கழக காப்பாளர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள், திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத் தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை, இயக்க வளர்ச்சிப் பணிகள் * நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்).

சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அம்மாப்பேட்டை: காலை 10.30 மணி * இடம்: குயில் பண்ணை, அம்மாப்பேட்டை * தலைமை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: அரங்க இளவரசன் (மாநகர் தலைவர்) * முன்னிலை: கே.ஜவகர் (மாவட்டக் காப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்) * பொருள்: தலைமைக் கழகம் அறிவித்த மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டம் நடத்துவது, கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றல் குறித்து * திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணித் தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து, கருத்துகளை தெரிவித்திட அன்புடன் அழைக்கிறோம் * இவண்: கி.பூபதி (மாவட்ட செயலாளர்)

பெரியார் மய்யம் – மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகம் திறப்பு விழா
மதுரை: மாலை 5.30 மணி *இடம்: 5 கீழமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பு, மதுரை * தலைமை: பழக்கடை அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்ட தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * பெரியார் மய்யம் திறந்து வைத்து சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * மாவட்ட தலைவர் அலுவலகம் திறந்து வைப்பவர்: பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகம்) * பெயர் பலகையை திறந்து வைப்பவர் – தே.எடிசன்ராசா (மாவட்ட காப்பாளர்), பெரியார் படம் திறந்து வைப்பவர் – இரா.விஜயராஜன் (மாநில குழு உறுப்பினர், சிபிஎம்), அன்னை மணியம்மையார் படம் திறந்து வைப்பவர் – பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்), காமராசர் படம் திறப்பாளர் – ரவிக்குமார் (தெற்கு மாவட்ட செயலாளர், விசிக), அம்பேதகர் படம் திறப்பாளர் – பேரறிவாளன் (பொதுச் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி), ஆதவன் (ஆதி தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர்) * ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடடர் கழகம்)

விராலிமலையில் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு விழா
திராவிடர் கழக பொதுக்கூட்டம்
விராலிமலை: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா சிலை செக்போஸ்ட், விராலிமலை * தலைமை: ஓவியர் சி.குழந்தைவேல் (ஒன்றிய தலைவர், விராலிமலை) * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணை செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (மாவட்ட காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.செல்வராசு (ஒன்றிய செயலாளர்).

12.08.2024 திங்கள்கிழமை
ஒசூர் மாவட்ட,
மாநகர கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 5.30 மணி*இடம்: சப்தகிரி பள்ளி அலசனத்தம் ரோடு ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் *வரவேற்பு:து.இரமேஷ் மாநகர தலைவர் *முன்னிலை: பேராசிரியர் கு.வணங்காமுடி காப்பாளர் *சிறப்புரை: ஊமை ஜெயராமன் தலைமைக்கழக அமைப்பாளர் *பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்கள், கட்டளை தீர்மானம் பெரியார் உலகம், தமிழர் தலைவர் ஆசிரியர், துணை தலைவர் கவிஞர் ஒசூர் வருகை (25.08.2024), ஓசூரில் 30.8.2024 கழக துணைப் பொதுச் செயலாளர் பங்கேற்கும் பொதுக்கூட்டம், புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், இயக்க செயல்பாடுகள் *நன்றியுரை: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் * விழைவு மாவட்டத்தில் உள்ள திராவிடர் கழக மாவட்ட, மாநகர, ஒன்றியம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலா ளரணி பொறுப்பாளர்கள் அவசியம் குறித்து நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். * அழைப்பு: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர், மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *