குருவே, “நீங்கள் எனக்கு நேரடியாக வில் வித்தை பயிற்சி அளித்தீர்கள்.
ஆனால், ஏகலைவன் உங்களை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை கற்றான்.
அப்படி இருந்தும் அவன் எப்படி என்னைவிட சிறந்த வில்வித்தை வீரனாக இருக்கிறான்?” என்று துரோணரிடம் ஒருமுறை அர்ஜுனன் கேட்டான்.
உடனே துரோணர், “அதோ அந்த மரத்தில் இருந்து ஓர் இலையை உன் அம்பு மூலம் வீழ்த்து” என்றார். உடனே அவன் இலையை வீழ்த்தினான்.
“அம்பு விடும்போது உன் கண்ணுக்கு என்ன தெரிந்தது?” என்று குரு கேட்டார்.
“உங்கள் கட்டளையும் அந்த மரத்தின் இலையும் தெரிந்தது” என்று அர்ஜுனன் சொன்னான்.
துரோணர் உடனே ஏகலைவனை அழைத்து, “அதோ அந்த மரத்திலிருந்து ஓர் இலையை வீழ்த்து” என்றார். அவனும் அவ்வாறே செய்தான்.
அவனிடமும், “நீ அம்பு விடும்போது உன் கண்ணுக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டார்.
“இலையின் காம்பும், என் அம்பின் நுனியும் மட்டும்தான் தெரிந்தது” என்றான்.
உடனே துரோணாச்சாரியார் அர்ஜுனனிடம், “இப்போது புரிந்ததா? ஏன் அவன் உன்னைவிட சிறந்த வில் வித்தை வீரனாக இருக்கிறான் என்று” சிரித்தபடி சொன்னார்.
அர்ஜுனன் தலை குனிந்தான்.
அந்தக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.