தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயா அலுவலர்கள கலந்து கொண்டனர்.