தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!
தனக்கென வாழா வீரத் தியாகி வ.உ.சி. நினைவு நாள் இன்று! அவர் விரும்பிய சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (18.11.2023) ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும், ‘சிறையிலே செக்கிழுத்தத் தியாகச் செம்மல்’ என்றும் போற்றப்படும் ஒப்பாரும் மிக்காருமில்லாத தன்னல மறுப்பாளர் – சமூகநீதிக்காக கடைசிவரை வாதாடிய வரும், தந்தை பெரியார் அவர்களே தமது போற்று தலுக்குரியவர் என்று மனந்திறந்து பாராட்ட, இறுதியில் சமூகநீதிப் போராளியாகவே குரல் கொடுத்த தொண்டறச் செம்மல் – நாட்டிற்கும், சமுதாய மேம் பாட்டிற்கும் தன்னையும், குடும்ப நலத்தையும் துறந்து, ‘மெழுகுவத்தியாக’ எரிந்து ஒளிகாட்டி வரலாற்றில் வாழும் மேதை வ.உ.சி. அவர்களது 87 ஆவது நினைவு நாள் இன்று!
வரலாறு உள்ள வரை அவர் வாழ்வார்! ‘தனக்கென வாழா பிறர்க்குரியாளர்’ என்ற சொற்றொடரின் ஒவ்வொரு எழுத் துக்கும், முழுப்பொரு ளுக்கும் ஒளி தரும் தொண்டறச் செம்மல் அவர்!
அவர்கள் நினை வைப்போற்றி, அவர் விரும்பிய சமூகநீதியை முழுமையாக அடைய உறுதி ஏற்று, உழைப்போம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.11.2023