கருநாடக மாநில உள்துறை அமைச்சரும், மேனாள் துணை முதலமைச்சருமான பரமேஸ்வராவின் பிறந்த நாள் விழாவில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்பொழுது தந்தை பெரியாரின் சிலையை பரிசாக அளித்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘தாட்ஸ் ஆப் பெரியார்’ என்கிற புத்தகத்தையும் வழங்கினார். உடன் அண்ணா திமுக மாநில செயலாளர் குமார். நிர்வாகிகள் ரவி, மோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தந்தை பெரியார் புகழினை எப்பொழுதும் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் சிலையையும் புத்தகத்தையும் பெற்றுக் கொண்ட உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நன்றியையும் மகிழ்ச்சியையும் புகழேந்தி அவர்களுக்கு தெரிவித்தார்.
கருநாடக மாநில உள்துறை அமைச்சரின் பிறந்த நாள் தந்தை பெரியார் சிலையை புகழேந்தி வழங்கினார்

Leave a Comment