9.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வக்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு-எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- கூட்டுக்குழுவுக்கு அனுப்பிய ஒன்றிய அரசு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) மற்றும் சரத் பவார் மற்றும் அவரது மருமகன் அஜித் தலைமையிலான போட்டி என்.சி.பி. பிரிவுகள் அக்டோபரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தங்கள் வாக்காளர் தளங்களை மேம்படுத்துவதற்காக மக்களை சந்திக்கும் பயணங்களை தொடங்குகின்றன.
– குடந்தை கருணா