சென்னை, ஆக.13 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக அநீதியை இழைத்து வரு கின்ற ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நேற்று (12.8.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக நீதி என்பது நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே, எடுத்த எடுப்பிலேயே உறுதி செய்யப் பட்டுள்ள குடிமக்களின் பறிக்கப்படக் கூடாத உரிமையாகும்!
“Justice, Social, Economic and Political” என்ற சொற்றொடர்கள் மிகவும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாகும். அந்த வகையில் கூட, முதலில் சமூக நீதி, இரண்டாவது பொருளாதார நீதி, மூன்றாவது அரசியல் நீதி என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
ஆனால், இந்த சமூக நீதியை இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் – திமுக முதலிய கட்சிகளின் கூட்டணியான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA – United Progressive Alliance) அரசு படிப்படியாக செய்தது!
அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற அமைப்புகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு, அதற்கு முன் கிடைக்காத இடஒதுக்கீடு கிட்டும் வாய்ப்பு – அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்து நிறைவேற்றிய 93ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தச் சட்டம் மூலம் கிடைத்தது
அதைப் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு தட்டிப் பறிக்கும் வகையில், மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங்களில் 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் 4 சதவிகிதம்தான். பிற்படுத் தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்.
இதன் பொருள்: மண்டல் பரிந்துரை ஆணை மோடி ஆட்சியில் குப்பைக் கூடைகளில் தான் என்பது புரிகிறது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே வழங்கப்பட்டுள்ள சட்ட வாய்ப்பின்படி எஸ்சி, எஸ்டி போன்ற ஆதி திராவிடர், பழங்குடியினருக்காவது – ஒதுக்கீடுபடி கிடைக்க வேண்டிய 23 சதவிகிதம் நிரப்பப்படுகிறா? என்றால், அதுவும் இல்லை.
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி ஆகிய மூன்று பிரிவினர்களுக்கான இட ஒதக்கீட்டிற்கு மிகவும் குறைந்த அளவே பதவிகளை நிரப்பிவிட்டு, மீதமாகும் எஞ்சிய பதவிகள் அத்தனையும் முன்னேறிய ஜாதியினருக்காகக் கபளீகரம் செய்யப்படுகிறது. அவர்களது சதவிகிதத்திற்கு மேல் முன்னேறிய ஜாதியினர் பன்மடங்கு அனுபவிக்கிறார்கள் – இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக மோடி ஆட்சியில்!
இதை எதிர்த்து நேற்று (12.8.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டனப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற் புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப் பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், காஞ்சி பா.கதிரவன், ஊமை.ஜெயராமன், திண்டிவனம் தா. இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையாறறினர்.
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்ட தலைமை கண்டன உரையாற்றினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். நிறைவாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், வெ.மு.மோகன், தே.ஒளி வண்ணன், தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன்,, ஆர்.டி.வீரபத்திரன், உத்தமன் விஜய், வெ.கார்வேந்தன், க.இளவரசன், புழல் த.ஆனந்தன், ஜெ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதை எதிர்த்து நேற்று (12.8.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டனப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற் புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப் பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், காஞ்சி பா.கதிரவன், ஊமை.ஜெயராமன், திண்டிவனம் தா. இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையாறறினர்.
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்ட தலைமை கண்டன உரையாற்றினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். நிறைவாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், வெ.மு.மோகன், தே.ஒளிவண் ணன், தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன்,, ஆர்.டி.வீரபத் திரன், உத்தமன் விஜய், வெ.கார்வேந்தன், க.இளவரசன், புழல் த.ஆனந்தன், ஜெ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் சேமெ.மதிவதனி ஒலி முழக்கங்கள் எழுப்பு அதை அனைவரும் முழங்கினர்.
ஒலி முழக்கங்கள்
ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்
பழங்குடிமக்கள் இடஒதுக்கீட்டை
முழுமையாக நடைமுறைப்படுத்து!
ஏமாற்றாதே ஏமாற்றாதே!
ஒன்றிய அரசுப் பணியிடங்களில்
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை
தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை
பழங்குடியினர் இடஒதுக்கீட்டை
நிரப்பாமல் ஏமாற்றாதே!
மத்தியப் பல்கலைக்கழகங்கள் எல்லாம்
பார்ப்பனர்க்கு மட்டும் பட்டாவா?
மத்தியப் பல்கலைக்கழகங்களா?
மனுவாதிகளின் கூடாரமா?
அக்கிரகாரக் கொட்டாரமா?
ஜூம்லா அரசே! மோடி அரசே!
பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். அரசே!
சமூகநீதியில் மோசடியா!
ஒடுக்கப்பட்டோருக்கு வஞ்சனையா?
நிரப்பிடு! நிரப்பிடு!
இடஒதுக்கீட்டுப் பணியிடங்களை
உடனடியாக நிரப்பிடு!
படிக்க வந்தாலும் இடஒதுக்கீடு மறுப்பு
பணியிடங்களிலும் இடஒதுக்கீடு மறுப்பு
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்காதே!
ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்காதே! சமூகநீதிக் கூடாரத்தில்
பொருளாதார ஒட்டகமா?
இந்து என்று சொல்லிச் சொல்லி
துரோகம் செய்யாதே துரோகம் செய்யாதே!
பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம் செய்யாதே!
ஒடுக்கப்பட்டோருக்குத் துரோகம் செய்யாதே!
முறியடிப்போம் முறியடிப்போம்!
சமூக அநீதியை முறியடிப்போம்!
வென்றெடுப்போம் வென்றெடுப்போம்!
ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை வென்றெடுப்போம்!
போராடுவோம் போராடுவோம்!
வெற்றிபெறும்வரை போராடுவோம்!
ஓயமாட்டோம் ஓயமாட்டோம்
ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை
மீட்கும் வரை ஓயமாட்டோம்!
பங்கேற்றோர்
தென்சென்னை: டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராக வன், சா.தாமோதரன், மு.இரா.மாணிக்கம், பா.இரா சேந்திரன்,எம்..டி.சி. அரங்க.சுரேந்தர். அரங்க.இராசா, மு.சண் முகப்பிரியன், வழக்குரைஞர் துரை.அருண், இரா.பிரபாகரன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, ச.துணைவேந்தன், கு.சிவபிரகாஷ், கு.பா.அறிவழகன், சோம.பாலசுப்ரமணியன், தமிழ்ச்செல்வன்
வடசென்னை: கி.இராமலிங்கம் (காப்பாளர்), நா.பார்த்தி பன் (இளைஞ ரணி), பா.கோபாலகிருஷ்ணன், சி.காமராஜ், கண்மணி துரை, சி.அன்புச் செல்வன், வ.தமிழ்ச்செல்வன், கொடுங்கையூர் சி.வாசு, அறிவுமதி, யுவராஜ், த.பரிதின்,
ஆவடி: அ.வெ.நடராசன், ரகுபதி, முரளி, கே.ஏழுமலை, மா.சிலம் பரசன், ராமலிங்கம், அய்.சரவணன், இரா.கோபால், பெரியார் மாணாக்கன், திருநின்றவூர் தமிழ்ச்செல்வன், கார்த்திக், பகுத்தறிவு, ரவீந்திரன், வஜ்ரவேல், சுந்தரராஜ், தங்க சரவணன், கோபால், பூவை.தமிழ்ச்செல்வன், அ.வெ.நடராசன், கார்ல் மார்க்ஸ், நாகராஜ், மோகன்ராஜ், மா.தமிழ்ச்செல்வன், முத்தை யன், சந்திரபாபு,
தாம்பரம்: மாடம்பாக்கம் அ.கருப்பையா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சந்திரசேகர், வழக் குரைஞர் இரா.உத்திரகுமாரன், பெருங் களத்தூர் பழநிசாமி, சீர்காழி ராமண்ணா, வண்டலூர் சுபாஷ், பொழிசை க.கண் ணன், காரைமாநகர் ப.கண்ணதாசன், போரூர் பரசுராமன்,
காஞ்சிபுரம்: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்), ஆ.மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்), எஸ்.செல்வம் (வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர்), குறளரசு (ஒரிக்கை பகுதி கழகத் தலைவர்)
செய்யாறு: வெங்கடேசன், தனுஷ், பிரதீப், விஜய், ஆகாஷ்
செங்கல்பட்டு: மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அருண், மதுராந்தகம் நகர செயலாளர் ஏ.செல்வம், வள்ளுவர் மன்ற செயலாளர் ம.சமத்துவமணி, இராதாகிருட்டிணன், மு.பிச்சைமுத்து (ப.க. மாவட்ட அமைப்பாளர்), சி.தீனதயாளன் (ப.க. மாவட்ட செயலாளர்),
கும்முடிப்பூண்டி: மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர், புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், கும்முடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் தெய்வ சிகாமணி, கும்முடிப்பூண்டி நகர தலைவர் ராமு, மாவட்ட இளைஞரணி சக்கரவர்த்தி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன்,
திருவொற்றியூர்: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்), தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்), ந.இராஜேந்தின் (துணைத் தலைவர்), இரா.சதிசு (இளைஞர் அணி) சி.வாசு (மாதவரம் நகர தலைவர்), மாணிக்கம், ஏ.மணிவண்ணன், கு.செல்வேந்திரன்,
சோழங்கநல்லூர்: வேலூர் பாண்டு, பி.சி.ஜெயராமன், ஜெ.குமார், சோமசுந்தரம்.
திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள்: இரா. செந்தூர பாண்டியன், செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, மு.இளமாறன், பா.கவிபாரதி, எஸ்.இ.ஆர்.திராவிட புகழ், அ.அறிவுச்சுடர், நிலவன், சிவபாரதி, வெ.இளஞ்செழியன், ம.சுபாஷ், மு.குட்டிமணி, சிந்தனை அரசு, அ.ஜெ.உமாநாத், இரா.கபிலன், ப. நீலன், பூ.மங்கலலெட்சுமி, நிரஞ்சன், ஜெனித், மு. அய்யப்பன், யுகேஷ், ஆனந்தகுமார், ச.பிரசாந்த், மாணிக்க வசந்த், பிரதீப் வசந்த், ஆதிகேசவன், இன்பதமிழ், துளசிராமன், ஆதி.
பொறுப்பாளர்கள்: திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், நெய்வேலி வெ.ஞானசேகரன், தேவக்கோட்டை ப.க. அறிவரசன், வழக் குரைஞர் ஆம்பூர் ஜெ.துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தாராபுரம் சு.முனிஸ்வரன், வழக்குரைஞர் நா.சக்திவேல் (பொதுக்குழு உறுப்பினர்)
கழக மகளிரணி: பசும்பொன், மாட்சி, பண்பு, இறைவி, மு.செல்வி, தொண்டறம், நாகவள்ளி, மங்கலலட்சுமி, ஓசூர் செல்வி, தேன்மொழி வேலூர், மீனாம்பாள், மோ.மீனாட்சிநாத்திகன், பெரியார் பிஞ்சு அய்யை, பெரியார் பிஞ்சு மகிழன், சீர்த்தி, மு.பவானி, மா.சண்முகலட்சுமி, முத்துலட்சுமி, வி.தங்கமணி, சோமங்கலம் அ.பா.நிர்மலா, பெரியார் பிஞ்சு நனிபூட்கை, பெரியார் பிஞ்சு செம்மொழி, திவ்யா, பெரியார் பிஞ்சு வெ.சாரல் இன்பன், மீரா நாத்திகன், வ.வளர்மதி, யாழ் ஒளி, பி.அஜந்தா, மணிமேகலை, மெர்சி அஞ்சலா மேரி, மகிழினி (பெ.பி.), கவிநிஷா (பெ.பி.), இ.நிவேதா இளம்பரிதி, தா.விஜயலட்சுமி தாஸ், தா.தேன்மொழி (திண்டிவனம்), இ.இனியா (பெ.பி.), நவநீத கிருஷ்ணன் (பெ.பி.), ஜெ.சொப்பன சுந்தரி, சு.தமிழினி தானு (பெ.பி.), சு.செல்வம் (செங்கல்பட்டு), ம.யுவராணி, ஏ.செம்மொழி, த.மரகதமணி, மு.செல்வமுரளி, சுஜித்ரா, ராணி ரகுபதி, வனிதா, சமத்துவமணி (பெ.பி.), தேன்மொழி (ஆவடி), ஏ.சரோஜா, கா.பெரியார்செல்வி, விநோதா, வெண்ணிலா, பகுத்தறிவு, சுகுணா (கடலூர்)
கழக தொழிலாளரணி – திராவிடர் தொழிலாளர் பேரவை: தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பேரவைத் தலை வர் கருப்பட்டி கா.சிவகுருநாதன், பொருளாளர் கூடுவாஞ்சேரி ராசு, திருச்சி முபாரக், திருச்சி முருகன், தாம்பரம் மா.குண சேகரன், சென்னை ஏழுமலை, சென்னை சுமதி கணேசன், தருமபுரி சிசுபாலன், காஞ்சிபுரம் முரளி, மோகன், குறளரசு, செல்வம், கதிரவன், திருப்பத்தூர் மோகன், கனகராஜ்
திருவாரூர்: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), ஆதிகேசவன், ஏ.நிரஞ் சன், இன்பத்தமிழ், அறிவுச்சுடர், ஜெனித், ஆதீஸ், துளசிராம், அரங்கராஜா, ஜெயராமன், வீர.கோவிந்தராசு, சிங்காரவேல்
உரத்தநாடு: மாநில மாணவர் கழக துணை செயலாளர் பா.கவிபாரதி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், உரத்தநாடு கு.லெனின், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரெ.யுவராஜ், ஒன்றிய விவசாய அணி தலைவர் சு.அறிவரசு, வெள்ளூர் மெய் யழகன், ஒக்கநாடு மேலையூர் நா.விக்னேஷ்
திண்டிவனம்: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ர.அன்பழகன் (மாவட்ட தலைவர்), செ.பரந்தாமன் (மாவட்ட செயலாளர்), நகர செயலாளர் ரோஷனை பன்னீர், மாவட்ட இளைஞணி தலைவர் மு.ரமேஷ், நகர இளைஞரணி செயலாளர் கோ.பாபு, பெரியார் பிஞ்சுகள் இனியா, இசைத் தென்றல், கவிநிலவன், கவிஅமுதன்
அரூர்: கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் பூபதி ராஜா, இளைஞணி அன்பரசன், மாணவர் கழக செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.