8.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அரசியல் சட்ட முகப்புரை பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகத்தில் இருந்து ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. நீக்கியதற்கு தெலங்கானா மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மைனாரிட்டி மோடி அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால், வரும் 2025ல் நடைபெற உள்ள பீகார் மாநில தேர்தலில் நிதிஷ் ஜேடியு – பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வீழ்ச்சி இருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் சக்தி வாய்ந்த கருவி: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு.
தி டெலிகிராப்:
* மருத்துவக் காப்பீடு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற, இந்தியா கூட்டணி மைனாரிட்டி மோடி அரசை வற்புறுத்தும் நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா இரண்டு ஆந்திரப் பிரதேச பாஜக கூட்டணிக் கட்சிகளும், அதே கோரிக்கையை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒதுக்கீடு அளவு விரைவான விகிதத்தில் சுருங்கி வருவதால், இடஒதுக்கீட்டின் மீதான 50% உச்சவரம்பை அகற்றுவதற்கும், அரசாங்கத்தால் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட பெரிய திட்டங்களில் இடஒதுக்கீட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் காங்கிரஸ் உயர்மட்ட குழு முடிவு.
– குடந்தை கருணா