அரூர், ஆக. 8- ஜூலை 11 முதல் 15 வரை சென்னை முதல் சேலம் வரை 1000 கி.மீ பயணம் செய்த தோழர்கள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மத்தூர் தோழர் அகரன், தோழர் வேப்பிலைப்பட்டி ஹரிகரன், தோழர் பாப்பிரெட்டிப்பட்டி ராஜேஷ், தோழர் பறையப்பட்டி வடிவேல் உள்ளிட்ட தோழர் களுக்கும், தாராபுரம் முதல் சேலம் வரை 890 கி.மீ கழக சொற்பொழிவாளராக குழுவில் பங்காற்றிய வேப்பிலைப்பட்டி த.மு.யாழ் திலீபன் ஆகியோருக்கு திராவிடர் கழக இளைஞரணி, திமாக சார்பில் பாராட்டி நினைவு பட்டயம் வழங்கப்பட்டது.
பாப்பிரெட்டிப் பட்டி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திமாக மாவட்ட தலைவர் இ. சமரசம் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் கு.தங்கராஜ் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் பா. பெரியார், ஆ.பிரதாப், சிறீராம், ஞானராட்சசன், ச.சாய்குமார், பார்த்தசாரதி, சுக்ரன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சு. சூர்யா நன்றி கூறினார்.
கும்பகோணம் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தப்படும். செப்டம்பர் திராவிட மாதத்தில் அண்ணா பெரியார் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாப்படும்.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கடத்தூர் நகரில் பொதுக்கூட்டமாக நடத்துவது என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு முன்பு துண்டறிக்கை பரப்புரை செய்யப்படும். விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா சேர்க்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.