செய்தி: மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடுபவர்கள் ஒன்றிய அரசை எதிர்த்துத்தான் போராட வேண்டும் – கி.வீரமணி
பஞ்ச்: பகுத்தறிவு வளரணும்னா கோயிலுக்குப் போகணுமா? – இந்து தமிழ் திசை
பதிலடி: உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும் என்பதை நிபந்தனையாக ஒன்றிய பிஜேபி அரசு வைத்துள்ளதை கவனமாகப் புறந்தள்ளும் இந்த ஏட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு ‘பஞ்சாம்!’
கோயிலுக்குச் சென்று பார்த்தால்தான் அர்ச்சகப் பார்ப்பனர்களின் வண்டவாளம் (காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் தேவநாதன், சிறிவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகர் பத்ரிநாத்) லீலைகள் தெரியும்! கோயிலில் செதுக்கப்படும் அருவருக்கத்தக்க ஆபாச சிற்பங்கள், இவற்றையெல்லாம் பார்த்தால் பக்தி வருமா? விரசம் வருமா?
பகுத்தறிவு வேலை செய்யாதா?