பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவு இடம்பெறாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை!

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.8- வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவில் இடம் பெறாவிட்டால் அபராதம் விதிக்க அரசு தயங்காது என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாதனை மலர்

வயது முதிர்ந்த 100 தமிழறி ஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (7.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

உதவித் தொகைக்கான அரசாணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் ஆற்றிய உரை வருமாறு:-

இந்த அரசின் மூன்றாண்டு காலத்திற்கான சாதனை மலரை துறை சார்பில் தயா ரிக்கிறோம். அனைத்துத் துறை களின் திட்டங்களும் அதில் சேர்க்கப்படுகிறது.
அதை விரைவில் முதல மைச்சர் வெளியிடுவார்.

வயது முதிர்ந்த தமிழறிஞர் களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, மருத்துவப்படியை அதிகப்படுத்துவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், மருத்து வப்படி, இயற்கை எய்தினால் உதவித் தொகை, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதும் விரை வில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

செம்மொழி நாள்

அதைத் தொடர்ந்து பத்திரி கையாளர்களுக்கு, அமைச்சர் சாமிநாதன் அளித்த பேட்டி வருமாறு:-
இந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்டபடி, ஒவ்வொரு ஆண் டும் ஜனவரி 25ஆம் தேதி, தமிழ்மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும். செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்த கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி, செம்மொழி நாளாக அரசு விழாவாக கொண்டாடப்படும்.

பெயர்ப்பலகையில் தமிழ்

வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்கிற உத்தரவிருக்கிறது. அரசின் உத்தரவை நடைமுறைப்படுத் தாதவர்களுக்கு அபராதம் விதிப் பதற்கு அரசு தயங்காது.
பெயர் பலகைகளில் தமிழில் இடம்பெறச் செய்வதற்கு தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலன் துறையும் இணைந்து செயல்படும்.

திரைப்படத் தொழிலாளர் கள் வேலைநிறுத்தம் அறிவித் திருக்கிறார்கள். அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *