முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் தேமேந்திர நாராயண் கர் நூலினை வெளியிட
வருமான வரி ஆணையர் (விலக்குகள்) மருது பாண்டியன் பெற்றுக்கொண்டார்
சென்னை, ஆக. 8- ஆடிட்டர் ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய ”அறக்கட்டளைகள் மற்றும் நிறு வனங்களின் வருமான வரிசட்டத் திருத்தங்களின் பரிணாமங்கள் ” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா 6.8.2024 அன்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்க கூடத்தில் நடைபெற்றது.
நூலினை முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் தேமேந் திர நாராயண் கர் வெளியிட முதல் பிரதியை வருமான வரி ஆணையர் (விலக்குகள்) மருது பாண்டியன் பெற்றுக் கொண்டார். பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஆடிட்டர் பூபதி, ஆடிட்டர் மனோகரன், ஆடிட்டர் சேகர், ஆடிட்டர் முனைவர் கந்தசாமி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் நாராயண் கர் தமது உரையில், புத்தக ஆசிரியர் ஆடிட்டர் ராமச்சந்திரன் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றி வரும் அரிய பணியினை பாராட்டினார்.
அறக்கட்டளைகள் சார்ந்த வருமான வரிச் சட்டங்களின் செயல்முறை மாற்றங்களின் பரிணாமத்தை இந்தப் புத்தகத்தில் விளக்கியதை குறிப்பிட்டு பாராட்டினார்.
வருமான வரி ஆணையர் மருது பாண்டியன் தமது உரையில், சிக்கலான செயல் முறை மாற்றங்களின் பரிணாமத்தை விளக்க ராமச்சந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சி, துணிச்சலான முயற்சி என்றும் அதற்காக ராமச்சந்திரன் அவர்களை மகிழ்ந்து பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஆடிட்டர் சேகர் தனக்கும் ராமச்சந்திரனுக்கும் உள்ள தொடர்பி னைப் பற்றி எடுத்துக்கூறி, இந்த புத்தகத்தை எழுதி வெளியிடு வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
ஆடிட்டர் பூபதி தமது உரையில் ராமச்சந்திரனை மாணவராக இருந்த காலத்தில் இருந்து தெரியும் என்றும், இந்தப் புத்தகம் அனைத்து வருமான வரி அலுவலர்களுக்கும், ஆடிட்டர் அலுவலகங்களிலும், வருமான வரி பயிலும் மாணவர்களுக்கும் சிறந்த கையேடாக விளங்கும் என தெரிவித்தார்.
ஆடிட்டர் முனைவர் கந்தசாமி தமது உரையில், ராமச்சந்திரன் தனது இளைய சகோதரர் போன்றவர் எனவும், அறக்கட்டளைகளுக்குரிய சட்டப் பிரிவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை திறம்பட வெளிப் படுத்தியதற்காகவும் பாராட்டினார்.
இந்த புத்தகத்தை தமிழ் மற்றும் இதர மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்.
ஆடிட்டர் மனோகரன் தனது ரையில், புத்தகம் எழுதுவது எவ்வளவு கடினமானது என வும், அதுவும் வருமான வரி சட்டத் திருத்தங்களை பற்றி எழுதுவது அதை விட கடினமானது, அது வும் அறக்கட்டளை சார்ந்த சட்டப்பிரிவுகளை பற்றி எழுதுவது என்பது மிகவும் கடினமான பணி என்றாலும், அதை ராமச் சந்திரன் எழுத முற்பட்டு, புத்த கத்தை வெளியிட்டிருப்பது, ராமச்சந்திரனின் திறமையை வெளிப்படுத்துகிறது எனவும் ராமச்சந்திரன் அவர்களை பாராட்டுவதாகவும். அந்த பாராட் டிற்கு ராமச்சந்திரன் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது எனவும், அவரது இணையர் வேல்விழி மற்றும் அவர்களது மகள்கள் யாழினி மற்றும் தென்றல் ஆகியோரையும் பாராட்டுவ தாகவும் தெரிவித்தார்.
ஆடிட்டர் ராமச்சந்திரன் தனது ஏற்புரை மற்றும் நன்றியுரையில், பாராட்டிப் பேசியவர்கள் அனைவரும் தனது வளர்ச்சியில் பெரும் பங்களிப்பு அளித்துள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்தார்
பங்கேற்றோர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேனாள் நீதிபதி ராசேந்திரன், பழமலை அய்.ஏ.எஸ். (ஓய்வு), மற்றும் வருமான வரித்துறை யின் ஆணையர்கள், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மோகனா அம்மையார், அச்சக மேலாளர் சரவணன் மற்றும் ஆடிட்டர் ராமச்சந்திரனின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்உள்பட பலர் புத்தக வெளியீட்டு விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.