காவிரிப் பிரச்­சி­னை­யில் உச்­ச­நீ­தி­மன்­றம் செல்­வ­தைத் தவிர தமிழ்­நாட்­டுக்கு வேறு வழி­யில்லை! அமைச்­சர் துரை­மு­ரு­கன் திட்­ட­வட்­டம்!

3 Min Read

அரசியல்

சென்னை,ஆக.13 – காவிரி பிரச்­சி­னை­யில் ‘உச்­ச­நீ­தி­மன்­றம் செல்­வ­தைத் தவிர தமிழ்­நாட்­டுக்கு வேறு வழி­யில்­லை’­என்று நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­க­ளின் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அமைச்­சர் துரை­மு­ரு­கன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:-

காவிரி பிரச்­சி­னை­யில் நடு­வர் மன்­றம் அளித்த தீர்ப்­பிற்கு பிறகு உச்­ச­நீ­தி­மன்­றம் ஒரு தீர்ப்பை வழங்­கி­யது.

உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்­புக்கு இந்­திய அர­சி­யல் சட்­டத்­திற்­குட்­பட்ட அனை­வ­ரும் கட்­டுப்­ப­ட­வேண்­டும் என்­பது நியதி.

உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பில் ஒவ்­வொரு மாத­மும் கருநா­டகா காவி­ரி­யில் எவ்­வ­ளவு நீரை திறந்து விட வேண்­டும் என்­றும் அந்த நீரை பில்­லி­குண்­டில் அள­வீடு செய்­யப்­ப­டும் என்­றும் தெரிவித்திருக்கிறது.

அதன்­படி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை­யில் கரு­நா­டகா 53.7703 டி.எம்.சி தண்­ணீரை தமி­ழ் நாட்டிற்கு வழங்கி இருக்க வேண்­டும். ஆனால் கரு­நா­டக அரசு வழங்கி இருப்­பதோ வெறும் 15.7993 டி.எம்.சி தான். ஆக நமக்கு ஏற்­பட்­டி­ருக்­கிற பற்­றாக்­குறை 37.9710 டி.எம்.சி.

இதன் கார­ண­மாக தஞ்சை தர­ணி­யில் காவிரி நீரை எதிர்­பார்த்து நிற்­கிற பயிர்­கள் எல்­லாம் காய் கின்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 

தஞ்சை வறண்டால் தமிழ் நாடே வறண்டு போகும்!

எனவே நிலை­மையை உணர்ந்து உச்ச நீதி­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள Cauvery Water Regulatory Committeeñ மற்­றும் Cauvery Water Management Authority  ஆகிய இரண்டு அமைப்­பு­க­ளும் விரைந்து செயல்­பட வேண்­டும் என்­றும், அவர்­கள் தமிழ்நாட்டிற்கு சேர வேண்­டிய தண்­ணீரை கரு­நா­டக அர­சி­ட­மி­ருந்து பெற்­றுத்­தர கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி, நான் ஒன்றிய நீர்­வ­ளத்­துறை அமைச்­சரை இரண்டு முறை சந்­தித்­தேன். தமிழ்நாடு முதலமைச்சர் தள­பதி அவர்­க­ளும் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்­கும் ஒன்­றிய நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும் கடி­தங்­களை எழுதி நிலை­மை­களை விளக்கி இருந்­தார். ஆனா­லும், அந்த இரண்டு அமைப்­பு­க­ளும் உட­ன­டி­யாக தன் பணி­களை ஆற்ற முன்­வ­ரா­மல் போனது மிக­வும் வருத்­தத்­திற்­கு­ரி­யது.

இறு­தி­யாக நம்­மு­டைய வற்­பு­றுத்­த­லுக்கு இணங்கி 10.8.2023 அன்று நடந்த Cauvery Water Regulatory Committee கூட்­டத்­தில் நாள் ஒன்­றுக்கு 15,000 சிஹிஷிணிசிஷி தண்ணீரை 15 நாட்­க­ளுக்கு விடு­வது என்று ஒரு­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­ப ட்­டுள்­ளது.

ஆனால், 11.8.2023 அன்று நடந்த CUSECS கூட்­டத்­தில் இது குறித்து 3 மணி நேரத்திற்கு மேல் விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அக்­கூட்­டத்­தில் தமி­ழ்நாட்டின் தேவை கடு­மை­யாக வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால், கரு­நா­டகா சார்­பில் வழக்­கம் போல் தங்­கள் நிலைப்­பாட்டை மாற்­றிக் கொண்டு 15,000 Cauvery Water Management Authority மட்­டும் தான் அது­வும் ஆகஸ்ட் 22 வரை­யில் தான் தர முடி­யும் என்று திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ள­னர்.

கரு­நா­டக அணை­க­ளில் தண்­ணீர் இல்­லாத நிலைப்­பாடு உள்­ளதா என்­றால் அப்­படி அல்ல கருநா­ட­கா­வில் இருக்­கிற நான்கு அணை­க­ளை­யும் சேர்த்து மொத்த கொள்­ள­ள­வான 114.571 டி.எம்.சி. யில் 93.535 டி.எம்.சி. தண்­ணீர் தேங்­கிக் கிடக்­கி­றது. அதா­வது கருநா­ட­கா­வின் மொத்த இருப்­பில் 82 சத­வி­கி­தம் தண்­ணீர் கருநா­டக வசம் இருப்­பில் இருக்­கி­றது.

கருநாடகாவின் இருப்பில் 80 சதவீதம் தண்ணீர் இருக்கிறது!

நீர் இல்லை என்ற நிலை கர்­நா­ட­கத்­திற்கு இல்லை. தமி­ழ் நாட் டிற்கு தண்­ணீர் தர­வேண்­டும் என்ற மன­நி­லை­யும் கருநா­ட­கத்­திற்கு இல்லை.இந்த போக்கு இன்று நேற்­றல்ல, காவிரி வர­லாற்றை அறிந்­த­வர்­க­ளுக்கு தெரி ­யும். காவி­ரி­யில் கருநா­ட­க- தமிழ்­நாடு பிரச்­சினை என்­றைக்கு தோன்றியதோ அன்­றை­யி­லி­ருந்து இந்த நிலையை கரு­நா­டக அரசு எடுத்து வரு­வது வருத்தத்திற்குரி­யது.

வாடிய பயிரை கண்­ட­போ­தெல்­லாம் வாடி­னேன் என்ற வள்­ள­லார் உள்­ளம் நமக்கு.

பயிர்­கள் காய்ந்­தா­லும் கவலை இல்லை என்ற உள்­ளம் கருநா­ட­கத்­திற்கு.

எனவே, தமிழ்­நாடு அர­சுக்கு உச்­ச­நீ­தி­மன்­றம் போவ­தைத் தவிர வேறு வழி­யில்லை. விரை­வில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்து, நீதி வென்று, நீரை பெற்று தரு­வோம் என்­ப­தில் முதலமைச்சர் தள­பதி ஆட்சி உறு­தி­யாக இருக்கிறது.

இவ்­வாறு அமைச்­சர் துரை­மு­ரு­கன் தெரி­வித்­துள்­ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *