சென்னை, ஆக. 7- நந்தனம் அரசு கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு இளங்கலை விலங்கியல் பட்டப் படிப்புக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட் டுள்ளது. சென்னை அண்ணா சாலை நந்தனம் அரசினர் ஆண்கள் கல்லூரியில், 16 வகையான இளங்கலை படிப்புகள், 13 வகையான முதுகலை படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் (2023- 2024ஆம் கல்வியாண்டு) படித்து வந்தனர்.
இந்த நிலையில், ஆண்கள் கல்லூரியாக இருந்த நந்தனம் அரசுக் கல்லூரியில், இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக் கவும், அந்த பகுதியை சேர்ந்த மாணவிகள் அதிகளவு பயனடையவும் ஆண்கள் கல்லூ ரியை ஆண்கள்- பெண்கள் படிக்கும் கல்லூரி யாக மாற்றி உயர் கல்வித்துறை கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டு, நடப்பு கல்வி யாண்டிலேயே சேர்க்கையை நடத்தியது.
இந்த நிலையில், நந்தனம் அரசு கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியாக மாற் றப்பட்ட பிறகு முதல்முறையாக திருநங்கை ஒருவர் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந் துள்ளார். வடசென்னையை சேர்ந்த திருநங்கை கிருவித்திகா, கடந்த கல்வியாண்டு பிளஸ்-2 நிறைவு செய்தார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், பின்னர் சென்னை நந்தனம் அரசு கல்லூரிநேரடி சேர்க்கை மூலம் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தார். அவ ருக்கு, கல்லூரியில் ஆங்கில வழி கல்வியில் இளங்கலை விலங்கியல் (பி. எஸ்சி.) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நந்தனம் கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக, ஆண் மற்றும் பெண்கள் படிக் கும் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு திரு நங்கை ஒருவருக்கு மாணவர் சேர்க்கை வழங்கப் பட்டுள்ளது. சினேகிதி அமைப்பினர் திருநங்கை கிருவித்திகாவை வழிகாட்டி, நந்தனம் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை இடம்பெற்றனர். முதல் முறையாக கல்லூரியில் சேர்க்கை ஆணை பெற்ற திருநங்கை கிருவித்திகாவுக்கு, கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசன் சேர்க்கை ஆணை வழங்கியும், திருக்குறள் தொகுப்பை வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். தங்கள் கல்லூரியில் பாலின சமத்துவத்தை அங்கீகரிக் கும் வகையில் திருநங்கை ஒருவருக்கு முதல் முறையாக மாணவர் சேர்க்கை ஆணை வழங் கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்தார்.