நீரிழிவு நோய் பாதிப்பால் வரக்கூடிய விளைவுகளை தடுக்க முடியும் என்கிறார் நீரிழிவு கார்டியோ வாஸ்குலர் சிறப்பு சிகிச்சை நிபுணர், டாக்டர்.நந்தகுமார் குழந்தைவேலு.
‘பர்மிங்காம்‘ இருதய உயர் குழு ஒரு மருத்துவ ஆராய்ச்சியை வெளியிட்டதை ஒட்டி, அமெரிக்க இருதய நோய்கள் குழுமம் பல ஆய்வுகளை செய்த பின் உறுதி செய்து வெளியிட்ட மருத்துவ அறிக்கை உலகையே அதிர வைத்ததுடன் ஆழ்ந்து சிந்திக்க வைத்துள்ளது.
இருதய ரத்தக்குழாய் தாக்கம் என்பது பலருக்கும் பல்வேறு வயதினருக்கும் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் நீரிழிவு உள்ள ஒருவருக்கு, நீரிழிவு நோய் மட்டுமே பிரதான காரணியாக அமைந்து அவருக்கு இருதய ரத்தக் குழாய் சிறுநீரகம், கண், கை, கால் மற்றும் நரம்பு மூட்டுகள் பாதிக்க போதுமானதாகிறது.
ஒரு கவளம் உணவு, இட்லி,தோசை,பூரி, பொங்கல், எதுவானாலும் வாயில் இட்டு சுவைக்க ஆரம்பித்த அந்த தருணமே, அந்த ஒரு கவள உணவு செரிமானம் அடையும் வகையில், உமிழ் நீர் உதவுகிறது.அதன்பின் விழுங்கிய பின்னர் மற்ற மாற்றங்கள் தொடர்கின்றன. நாம் உண்ணும் அரிசி, கோதுமை, இட்லி போன்ற உணவுகள் எல்லாம் ஆற்றலாக மாற முதலில் குளுக்கோஸ் என்ற அடிப்படை உணவாக மாற்றப்பட வேண்டும்.
இந்த குளுக்கோஸ் நம் உடல் உறுப்புக்களுக்கு தசை, திசு, செல் வழியாக சென்று ஆற்றலாக மாற இன்சுலினை உடல் சுரக்கிறது. ஆனால் நீரிழிவு உள்ளவர்களுக்கு இன்சுலினை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் குளுக்கோஸ் மாற்றம் அடையாமல் முழு குளுக்கோஸ் ரத்தத்தில் அதிகமாகிறது என்பதுதான் முக்கிய காரணம்.
அடுத்து நாம் உண்ணும் உணவு மாவு சத்தாகவே இருந்தால் உடல் சுரப்பி அவசர அவசரமாக ஆற்றல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ரத்தத்தில் குளுக்கோஸ் அதிக அளவு ஏறும் ஆற்றல் கிடைக்காது.உடல் சோர்வு, தளர்ச்சி ஏற்படலாம்.
ஒரு வாய் உணவு சாப்பிடுவது முறை தான். ஆனால் வாயை அடைத்துக் கொண்டு சாப்பிட்டால் மூச்சு என்ன ஆகும்? இப்படித்தான் அதிக மாவுகார்போஹைட்ரேட்டினை உண்பதால் சர்க்கரை அளவு உச்சத்தை எட்டி… ரத்தக்குழாய் சிதைவு அதாவது இருதய, கண், சிறுநீரக,கை,கால், ரத்த குழாய்கள் சிதையும் நசிவும் ஏற்படும்.
இதைத்தான் நீரிழிவு என்றாலே இருதய மற்றும் மற்ற உறுப்புகள் தாக்கம் என்பது. இதை முன்கூட்டியே கண்டறிந்து சிறப்பான சிகிச்சை, உங்களுக்கான பயிற்சி, உணவு, மருந்துகளை முறைப்படுத்தி உங்களை நோய் தாக்கத்திலிருந்து காப்பதே… Cardio Vascular Diabetologistஇன் உயரிய நோக்கம் ஆகும்.
தகவல் தொடர்புக்கு: Specialty Medical centre
(Integrated) Prof.Dr.Nandakumar, 95979 77563.