கும்பகோணத்தில் 04-08-2024 அன்று மாலை நடைபெற்ற மாபெரும் சமூக நீதிப் பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பேரணி மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் குடந்தை சேய் குளம் அருகில் சரியாக அய்ந்து மணிக்குத் தொடங்கியது. பேரணிக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத்தின் லட்சியக் கொடியை அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணிக்குத் தலைமையேற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு குடந்தை மாவட்ட கழகச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ் சிறப்பு செய்தார். துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். திராவிடர் கழக நிகழ்ச்சி என்றால் அங்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி கட்டாயம் இடம்பெறும். அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 51(h1) வலியுறுத்தக் கூடிய அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் பல்வேறு அறிவியல் ரீதியான செயல்முறைகளைச் செய்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினர்.
தொடங்கி வைத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், “வரலாற்றுச் சிறப்புமிக்க குடந்தை- திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பே திராவிட மாணவர் கழகம் உருவாக்கப்பட்ட நகரம்’’ என்று குறிப்பிட்டு, மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்குத் தீச்சட்டி எடுத்தல், கடவுள் இல்லை என்று சொல்லி முதுகில் அலகு குத்தி கார் இழுத்தல், பறை இசை, கோலாட்டம், அரிவாள்மீது ஏறி நிற்றல், தலையில் தேங்காய் உடைத்து மூடநம்பிக்கையைத் தோல் உரிக்கும் திராவிடர் கழகத் தோழர்களை வாழ்த்தி உரையாற்றினார்.
சேய் பாலம் அருகில் தொடங்கிய பேரணி ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக விண்ணை முட்டும் முழக்கத்துடன் காமராஜர் சாலையைக் கடந்து, தலைமை அஞ்சலகச் சாலை வழியாக, மூப்பனார் சிலை வழியாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மேடை அமைந்திருந்த கடலங்குடி தெருவை வந்து அடைந்தது. திராவிடர் கழகத் தோழர்களைப் பொறுத்தவரை, கழகத் தலைவர் எங்கு மாநாடு அறிவிப்பார்? எங்கு போராட்டம் அறிவிப்பார்? எங்கு சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளை அறிவிப்பார்? என்பதுதான் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய திருவிழாவாகும். அதில் பெரியாரின் பேரன், பேத்திகள் தொடங்கி பெரியார் பெருந்தொண்டர்கள் வரை ஆடிப் பாடிக் கொண்டாடி வருவது வழக்கமாகும். அந்த வகையில் காலையில் திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டம் மிக நேர்த்தியாக பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களுடன் நடைபெற்று முடிந்தது.
பொதுக் குழுவில் பாராட்டு
சமூக இணைய தளங்களில் தந்தை பெரியார் கொள்கைகளை காணொலி மூலமும் யூ–டியூப் வழியாகவும் பரப்பும் பணியைச் செய்து வரும் கழகத் தோழர்கள் குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் பாராட்டப்பட்டனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் (தலைவர் நேரு) 106 நிகழ்ச்சிகள், பகுத்தறிவு ஊடகத் துறை (தஞ்சை மா. அழகிரி) 1000 நிகழ்ச்சிகள், பெரியார் பேசுகிறார் (தஞ்சை. கோபு. பழனிவேல்) 90 நிகழ்ச்சிகள், சென்னை அரும்பாக்கம் தாமோதரன் (அறிவுவழி 1444).
கழகக் கொடியை ஏந்திச் சென்ற பெரியார் பிஞ்சு
குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி-சங்கீதா ஆகியோரின் மகன் சிறுவன் பிஞ்சு குடியரசு குதிரையின் மீது அமர்ந்து பேரணிக்கு முன் கழக லட்சியக் கொடியை ஏந்தி சென்றார்.
திறந்த வாகனத்தில்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் திறந்த வாகனத்தில் பேரணியை பார்வையிட்டனர்.
கார் இழுத்த கருஞ்சிறுத்தைகள்
மாலையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் “கடவுண்டு என்று சொல்லி தேர் இழுப்பவர்களை பார்த் திருப்போம்! தோழர்களே பாருங்கள் கடவுள் இல்லை என்று சொல்லி மக்களுக்குத் தீச்சட்டி எடுத்தல், கடவுள் இல்லை என்று சொல்லி முதுகில் அலகு குத்தி கார் இழுப்போரை பார்த்தீர்களா? என்று முழக்கமிட்டுச் சென்றனர். விக்கிரவாண்டி புஷ்பநாதன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் கார் இழுத்து “தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! மூடத்தனம் ஒழிக” என்று முழக்கமிட்டனர். இதற்கான ஏற்பாட்டினை தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தலைமைக் கழகப் பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு செய்திருந்தனர்.
தீச்சட்டி எந்திய மகளிர் தோழர்கள்
மகளிர் மத்தியில் பெருகி வரும் மூடத்தனங்களை ஒழிக்கக் கூடிய வகையில் மகளிர் தோழர்கள் குடியாத்தம் தேன்மொழி, பூவை செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தஞ்சை அஞ்சுகம், கபிஸ்தலம் அறிவுமணி, கும்பகோணம் திரிபுரசுந்தரி, தஞ்சாவூர் மலர்க்கொடி, திருவாரூர் பூபதி, திருக்குவளை மல்லிகா, சுதா, நாச்சியார் கோவில் உஷாராணி, குடந்தை ரோஸ்லின், கபிஸ்தலம் அன்புமணி, உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் தீச்சட்டி ஏந்தி “தீச்சட்டி இங்கே! மாரியாத்தா எங்கே?” என்று முழக்கமிட்டதை பொதுமக்கள் வெகு வாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
பேரணியில் தீச்சட்டி ஏந்திய
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், குடந்தை அரசன் மகளிர் தோழர்கள் எடுத்துச்சென்ற தீச்சட்டியை ஏந்தி சென்றார்.
அரிவாள் மீது ஏறி நின்று …
அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறுவதாக மூடநம்பிக்கை பரப்புபவர்களுக்கு, கறம்பக்குடி முத்து, பேராவூரணி சோம. நீலகண்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலசுப்பிரமணியன், வாத்தி ஆகிய தோழர்கள் அரிவாள் மீது ஏறி நின்று “இது எல்லாம் கடவுள் சக்தியல்ல” என்பதை விளக்கி, பகுத்தறிவு முழக்கங்களை இட்டனர்.
கறம்பக்குடி முத்து அவர்களின் குழுவினர்
வழியெங்கும் கறம்பக்குடி முத்து அவர்களின் குழுவினர் பாலகிருஷ்ணன், போஸ்டல் சண்முகம் சிலம்பாட்டத்தை மிகச் சிறப்புடன் செய்து காட்டினர். தீப்பந்தங்களுடன் சிலம் பங்களைச் சுற்றக்கூடிய வகையிலும் செய்து அசத்தினர்.
நாக்கில் சூடம் ஏற்றிய தோழர்
வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் க.பவானி சங்கர் நாக்கில் சூடம் ஏற்றி மக்களை இப்படிதான் ஏமற்றுகிறார்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கிராமியக் கலைமணி கே.பி. தங்கவேல் தப்பாட்டக் குழுவினர்
தொடர்ச்சியாக கிராமியக் கலைமணி கே.பி. தங்கவேல் தப்பாட்டக் குழுவினர் குடந்தை நகரத்தைப் பறை இசை அடியால் அதிரவிட்டனர்.
பேரணியில் முழக்கமிட்ட பெரியார் பிஞ்சுகள்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த செ. அறிவுச் செல்வன், நாகை சா. அறிவாளன், நாகை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த த. செந்தமிழ் உள்ளிட்ட பெரியார் பிஞ்சுகள் முழக்கமிட்டனர்.
பெரியார் பிஞ்சுகள் நடத்திய கோலாட்டம்
சடையார்கோவில் வெ.நாராயணசாமி ஒருங்கிணைப் பில் பெரியார் பிஞ்சுகள் கோலாட்டத்தினை – பேரணி முழுவதும் பார்ப்போரை கண்கவரக்கூடிய வகையில் பிஞ்சுகளின் கோலாட்டம் இருந்தது. குழுவினர் மா.குழந்தைவேல், செ.கோவிந்தராசு, ப.இராசகோபால், இரா.சிவா, கோ.சந்தோஷ், இ.ஜலால், தொ.மொழிஅரசன், இரா.சுடர்வேந்தன், இ.ஜாவித் அக்தர், அ.யுவராஜ், ந.திவ்யா, வீ.அபிநயா, அ.நந்தினி, தர்ஷினி, சி.புன்னைச்செல்வி, கு.சாரு, ரத்தீபா, சுவேதா, ம.இனியா.
பேரணியில் முழக்கமிட்ட தோழர்கள்
பேரணியில் கருஞ்சட்டைத் தோழர்கள் த.சீ. இளந் திரையன், ஆண்டிமடம் சிந்தனைச் செல்வன், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, இளமாறன், தொண்டறம், சென்ன கிருஷ்ணன், நாகை செந்தில்குமார், ராசா முருகையன், நாத்திகப் பொன்முடி, நர்மதா, தம்பி பிரபாகரன் உள்ளிட்ட இளைஞரணித் தோழர்கள் பேரணி முழக்கங்களை முழக்கமிட்டதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட மேடையில் கழகத் தலைவர் உரையாற்றும்போது குடந்தையை உலுக்கி எடுத்த பேரணியை ஏற்பாடு செய்த அத்தனைத் தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பேரணியில் பங்கேற்றோர்
செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப்பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில கிராமப்பிரச்சாக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட காப்பாளர்கள் வை.இளங்கோவன், மு.அய்யனார், இ வே.கோவிந்தன், தலைமை கழக அமைப்பாளர்கள் க.குருசாமி, மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், தே.செ.கோபால், க.சிந்தனைச்செல்வர், த.சீ.இளந்திரையன், தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, செயலாளர் உள்ளிகடை சு.துரைராஜ், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், செயலாளர் அ.அருணகிரி, மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் கோ.கணேசன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், செயலாளர் வை.சிதம்பரம், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், சி. வெற்றிச்செல்வி, செயலாளர் சவு.சுரேஷ், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.விஜயகுமார், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் வி.சி.வில்வம், தஞ்சை இரா.வெற்றிக்குமார், மா.அழகிரிசாமி, ச.சித்தார்த்தன், கோபு.பழனிவேல்இ, அ.ஜெ.உமாநாத், த.ஜில்ராஜ், கு.ஜெயமணி, வ.அழகுவேல், ஆ.தமிழ்மணி, பீ.இரமேஷ், கோவி.மகாலிங்கம், தங்க.பூவானந்தம், எம்.என்.கணேசன், க.பவானி சங்கர், நா.இராமகிருஷ்ணன், தே.பொய்யாமொழி, பொன்.பன்னீர்செல்வம், சொற்பொழிவாளர்கள் தஞ்சை இரா.பெரியார் செல்வன், இராம.அன்பழகன், பூவை.புலிகேசி, சு.சிங்காரவேலர், தே.நர்மதா உள்ளிட்ட தோழர்கள் பெருமளவில் பங்கேற்று பேரணியை சிறப்புற நடத்தினர்.
பேரணியின் இருபுறங்களிலும் பொது மக்களும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், பிஞ்சுகள் கூடி நின்று ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். பல இடங்களிலும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.