சென்னை, ஆக. 5- அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் அயலக வாழ் தமிழா் வம்சாவழியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், புராதன சின்னங்கள், சிற்பக் கலைக் கல்லூரியில் பார்வையிட்டனா்.தமிழ்ப் பண்பாடு, வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த சுற்றுலாப் பயணம் அமைந்திருந்தனா்.
இந்தத் திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு வர வழைத்து, தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்அழைத்துச் செல்லப்படுவா்.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் மூலம் நான்கு நாடுகளைச் சோ்ந்த தமிழ் இளைஞா்களைக் கொண்ட முதல் கட்ட பயணம் செயல்படுத் தப்பட்டது.தொடா் நிகழ்வாக, நிகழாண்டு பயணம் தென்னாப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந் தோனேசியா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்கள் ஆக. 1 முதல் 15 வரை அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்தக் குழுவினா் 3.8.2024 அன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலை கண்டு ரசித்த னா். தொடா்ந்து அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் கல் சிற்பங்கள், மரச் சிற் பங்களைப் பார்வை யிட் டனா்.
தொடா்ந்து அவா்கள், வீராணம் ஏரி, கங்கை கொண்டசோழபுரம், தஞ்சை பெரிய கோயில், கல்லணை, சித்தன்னவாசல் குகை, கட்டபொம்மன் நினைவு இல்லம், ஆதிச்சநல்லூா் தொல்லியல் ஆய்வுத் தளம், குற்றால நீா்வீழ்ச்சி, செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட இடங்களைப் பார்க்கவும் தமிழ்நாடு அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் வளா்ச்சி ஆணையா் நா.முருகானந்தம், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலா் ரீட்டாஹரிஷ் தக்கா், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் பா.கிருஷ்ணமூா்த்தி, அயலகத் தமிழா் நல வாரியத் தலைவா் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றுள்ளனர்.