சென்னை,ஆக.14 இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
கடந்த மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்தபோது, மோரே வில் இருந்து மியான் மருக்கு தப்பிச் சென்ற மெய்தி மற்றும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 230 இந்தியர்களில் பலர் 100 நாட்களுக்கும் மேலாக மியான்மரின் அடர்ந்த காடுகளில் சிக் கித் தவிப்பதாக நாளி தழில் செய்தி வெளியா னது. அவர்களுக்கு எந்த நிவாரணமும், ஆதரவும் கிடைக்காததால் உயிருக் குப் போராடி வருவ தாகவும் கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் குகி -ஸோ பழங்குடியினரால் சூழப்பட்ட நிலையில், தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் எல் லைகளைத் தாண்டி மியான்மருக்குள் சென்றி ருக்கின்றனர். கலவரத் தில் அவர்களது வீடு களும், கடைகளும் எரிக் கப்பட்டுவிட்டன. தற்போதை நிலவரப்படி, காட்டுக்குள் சென்று தப் பித்த அவர்கள், அங் குள்ள மக்களின் உதவி யுடன் பெயர் தெரியாத இடத்தில் வசித்து வருவ தாக கூறப்படுகிறது. வாழ்வதாரங்களை இழக்கும் முன்பு, இந்திய ராணுவத்தின் உதவி யுடன் அவர்களை கண் டறிந்து, பத்திரமாக மீட்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, தமிழ்க் குடும்பங்கள் உள்பட 230 பேரையும் மீட்டு, அந்தந்த இடங் களில் பாதுகாப்பாக குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை மீட் டெடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.