திருவாரூர்,ஆக.14- திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42) .இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று (13.8.2023) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பணியிலிருந்த அர்ச்சகர் ஞானசுந்தரம் மந்திரங்கள் கூறுவதற்காக ஒலி வாங்கியை கையில் எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.