மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது.
ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத்தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறி விட்டது.
(‘விடுதலை’ 12.12.1948)