4.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல் முறையீடு?
* 2024 பொதுத் தேர்தலில் பாஜக 79 இடங்களை கூடுதலாக பெற்றதற்கு, வாக்கு எண்ணிக்கையில் உள்ள குளறுபடிகள் தான் காரணம், விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு.
தி இந்து:
* ஒன்றிய அரசின் உறுதியற்ற தன்மை மணிப்பூரில் கிளர்ச்சியை மீண்டும் உருவாக்கியுள்ளது: பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி.
தி டெலிகிராப்:
*நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை தேர்வுக் கட்டணத்தில் இருந்து 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி உபரி வருவாய் ஈட்டியுள்ளது: இருப்பினும், வினாத்தாள்களை கொண்டு செல்ல இ-ரிக்சாவை பயன்படுத்தியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டில் கணிச மான பகுதி ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமல் போகிறது, இதில் ‘கிரீமிலேயர்’ அதிக இடங்களை கைப்பற்றினார்கள் என்ற வாதம் ஏற்புடையதா? உயர் பதவிகளில் நிரப்பப்படாத பதவிகளின் விகிதம் அதிகரிக்கிறது என்பதையும் தரவு காட்டுகிறது.
– குடந்தை கருணா