காரைக்குடி அருகில் உள்ள விசாலயன்கோட்டையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கல்லல் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன் ஏற்பாட்டில் புதுப்பிக்கப்பட்ட கழகக் கம்பத்தில் திராவிடர் கழகக் கொடியினை மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி ஏற்றி வைத்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் இதே இடத்தில் கழகக் கொடி ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.