ஈரோடு,ஆக.15- சத்தியமங்கலம் பண்ணாரியில் அரசு பேருந்துக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்களாம்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணி அளவில் பண்ணாரி, ராஜன் நகர், பசுவபாளையம், புஞ்சைபுளியம் பட்டி, திருப்பூர், திண்டுக்கல் வழியாக தேனிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்தில் பல ஆண்டு களாக பண்ணாரி மற்றும் ராஜன் நகரை சேர்ந்த 36 தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள்.
தொழிலாளர்கள் அந்த பேருந்துக்கு Ôதிருஷ்டிÕ கழிக்க(?) ஆடி மாதத்தில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கமாம்!
இந்த நிலையில் கரோனா காரணமாக 3 ஆண்டுகளாக தொழி லாளர்கள் பேருந்துக்கு பூஜை செய்யவில்லை. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தொழிலாளர்கள் பூஜை நடத்த முடிவு செய் தார்கள். இதையடுத்து அதற் கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 13.8.2023 அன்று காலை சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பேருந்து பண்ணாரி வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பேருந்து ஏற வந்த தொழிலாளர்கள் அந்த பேருந்தை நிறுத்தி மாலை அணிவித்து சந்தனம், திருநீறு, குங்குமம் வைத்து மரியாதை செலுத் தினர். மேலும் கிடாய் பலியிட்டு பூஜை நடத்தினார்களாம்.