சென்னை, ஆக. 2- மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்கு டியினர் பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று (01.08.2024) அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல மாநிலங் களின் உள் இட ஒதுக்கீடு முடிவுகளுக்கு எதிரான 20 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்புள்ள இத் தீர்ப்பை வழங்கியது சமத்துவத்திற்கு வழி வகுக்கும்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு, முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பட்டியல் இனத்தவரின் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத் திற்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளில் 6 பேர், தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடி யும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இத்தகைய உள் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவை மீறவில்லை என்றும் 6 நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இத்தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி இருப்பதுடன், சமூக நீதி தழைக்கவும் வழிவகை செய் திருப்பது பாராட்டத்தக்கதாகும்.
-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.