திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
திருநெல்வேலி, ஆக. 15- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 13. 8 .2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி அளவில் தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் ச. இராசேந் திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா. வேல்முருகன் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடுஇரா. குணசேகரன் அறிவா சான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை எந்தந்தவகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார் .
திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன் தமிழர் தலைவர் அவர்களின் உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு வரும் தொண்டாற்ற வேண்டும் – மாணவர் அமைப்பை வலிமைப் படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கழக காப்பாளர் இரா.காசி சி.வேலாயுதம், பெரியார் பெருந் தொண்டர்கள் வீரவநல்லூர் எஸ். பாண்டியன், ச.பெரியார்பித்தன், ம.விஜயராமரத்தினம், சு.மணி வண்ணன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தென்கலம் கு.வெள்ளத்துரை ரா.இலக்கு ம ணன், சேரன்மாதேவி ஒன்றிய தலைவர் செல்வ சந்திரசேகர் மாணவர் கழகத் தோழர்கள்பா.பனுமதி, ஆகாசு,சிரிநாத் ஆவடி நகர செயலாளர் இ.தமிழ்மணி, தச்சநல்லூர் பகுதி கழகத் தலைவர் இரா. கருணாநிதி செயலாளர் செ.மாரிகணேசு, பாளையங் கோட்டை பகுதி தலைவர் செ .தர்மராசு,செயலாளர் பா.பால கிருட்டிணன், திருநெல்வேலி பகுதி தலைவர் ஜி. மார்ட்டின் செயலாளர் ந. மகேசு உள்ளிட் டோர் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள்.
அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருக்கும் காப்பாளர் இரா.காசியின் மருமகன் குமார் இயக் கத்தின் இனமான பணியை பாராட்டி மகிழ்ந்தார். அவருக்கு மாவட்ட கழகம் சார்பில் பய னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட் டது. மேலும் மு.சிதம்பரம் கழகத் தில் தம்மை இணைத்துக்கொண் டார் வரவேற்று பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. காப்பாளர் சி.வேலாயும் மாடர்ன்ரேசனலிஸ்ட் ,உண்மை இதழ்களுக்கு சந்தாக்கள் வழங்கினார்.நிறைவாக மாநகர செயலாளர் வெயிலுமுத்து நன்றி கூறினார்.
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை செப்டம்பர் 17-ஆம் தேதி யன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், புத்தாடை உடுத்தியும், இனிப்பு வழங்கியும், கழகக் கொடியேற்றியும் கொண் டாடி மகிழ்வதெனவும், தந்தை பெரியான் 145 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திராவிட மாணவர் கழகம் சார்பில் “மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது எனவும் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியை சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு நடத் துவது எனவும், வீரவநல்லூர் ,அம் பாசமுத்திரம், அயன் சிங்கம்பட்டி ,தென்கலம் ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நாங்குநேரியில் ஜாதிய வன்மத் தோடு மாணவர் சின்னதுரை ,அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியமைக்கு இக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது, ஜாதி மூட நம்பிக்கைக்கு எதிரான பரப்புரையினை மாவட்டம் முழுவதும் நடத்துவது எனவும், தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் உளம் கனிந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர் தலைவர் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி சிறப்பித்த மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு இக்கூட்டம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி
தலைவர்- வீரபாண்டிய கட்ட பொம்மன்
செயலாளர்-மு.தமிழ்ச்செல்வன்
மாவட்ட திராவிட மாணவர் கழகம்
தலைவர்-செ.சூரியா
செயலாளர்-பா.பானுமதி.
தச்சநல்லூர் பகுதி மாணவர்கள் செயலாளர் -ஆகாசு.