புதுடில்லி, ஆக. 1- பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கடந்த 4 வாரங்களில் மட்டும் 10-க்கு மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. இது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க வலியுறுத்தி பிரஜேஷ் சிங் என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை 29.7.2024 அன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவுக்கு பதிலளிக்கு மாறு பீகார் அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், பீகார் மாநில சாலை கட்டுமானத்துறை கூடு தல் தலைமை செயலாளர் ஆகியோருக்கும் தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.