31.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு: பா.ஜ.க. எம்.பி. அனுராக் விட்ட வார்த்தை.. பதிலடி கொடுத்த ராகுல்.. மக்களவையில் காரசார வாதம்
* எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனைகளை பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது. ஆனால் இப்படி அவதூறு பரப்பிய அனுராக் தாக்கூர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் விரும்பவில்லை. எவ்வளவு அவதூறு பரப்பினாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்த அவையிலேயே எதிர்க்கட்சிகள் உறுதி செய்யும்” என ஆவேசமாக தெரிவித்தார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜார்க்கண்டில் அதிகாலையில் விபத்து ஹவுரா-மும்பை ரயில் தடம் புரண்டது: 2 பேர் பலி 20 பேர் காயம்.
* அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்; இந்தியா கூட்டணி சார்பில் டில்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்றத்தில் ‘ராகுலின் உடல்மொழி, செயல்படும் விதம், காங்., கூட்டணி கட்சிகளுக்கும், பா.ஜ.க,வுக்கும் அவர் தான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்ற வலுவான செய்தியை தந்துள்ளது என்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.
* நவி மும்பையில் நடந்த சமூக ஒற்றுமை மாநாட்டில் உரையாற்றிய சரத் பவார், மகாராட்டிராவில் மராத்தா மற்றும் ஓபிசி சமூகங்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு வரிசையில் அதிகரித்து வரும் பதற்றத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, மணிப்பூர் போன்ற கலவரங்கள் உருவாகிவிட கூடாது என கவலை தெரிவித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக பிரச்சினைகளை யார் எழுப்பினாலும், எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டும்: மக்களவையில் அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி.
* ஒரே ரேங்க், ஒரே பென்சன் நடைமுறைப்படுத்துவதில் மோடி அரசின் தாமதம்; ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்.
தி டெலிகிராப்:
* ஒரு நூற்றாண்டு பழமையான சாதனையை 22 வயது மனு பாக்கர் சுட்டு வீழ்த்தினார்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர், 23 வயதான சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை ஆனார்.
* புதுடில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிட்டி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தாவின் மைக் “சுவிட்ச் ஆஃப்” செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் சிறப்புக் கண்டன அறிவிக்கை.
– குடந்தை கருணா