‘தி இந்து’க் குழுமத்தின் பெண்கள் மாநாட்டில்
முதல் அமைச்சர் காணொலி உரை
சென்னை, ஜூலை 31- ‘தி இந்து’ குழுமம் ஏற்பாடு செய்த பெண்கள் மாநாட்டிற்கு வாழ்த்துக் தெரிவித்து காணொலியில்உரையாற்றிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பெண்கள் முன்னேற்றத்துக்கு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் என்றால், அது நமது தமிழ்நாடுதான்” என்றும் – “மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலமாக நமது திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது!” என்றும் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது,
’தி இந்து’ நடத்தும், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட் டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு இந்தி யாவிலேயே முன்னோடியான மாநிலம் என்றால் அது, நமது தமிழ்நாடுதான்!
ஜாதி – மத – சடங்குகள் பெயரால் அடக்கப்பட்ட பெண்கள், தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராடி முன்னேறிய வரலாறு, தமிழ் நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்குமே உரியது!
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கியது 1989-இல் இருந்த தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் துறையை என்னிடம் ஒப் படைத்தபோதுதான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக இலட்சக்கணக்கான பெண்களுக்குச் சுழல்நிதி வழங்கி மகளிர் தொழில் செய்வதில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் என்ற நிலையை ஏற்படுத்தினேன்! இப்போது நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெண்களுக்குத்தான், எல்லாத் திட்டங்களிலும் முன்னுரிமை கொடுத்துள்ளேன்.
பெண்களைத் தற்சார்புள்ளவர்களாக மாற்றும் இலவச விடியல் பயணம், அவர்களின் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தாய்வீட்டுச் சீராகப்பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். பெண்கள் உயர்கல்வி பயில எந்தத் தடையும் இருக்கக் கூடாது என மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன்.
‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக, குழந்தைகளும் பெண்களும் பயனடைகிறார்கள். பணிக்காக நகரங்களுக்குப் போகும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கத் ‘தோழி’ விடுதிகள். இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. நமது திட்டங்களை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங் களும் பின்பற்றுகிறார்கள். இப்போது போடப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் நமது திட்டங்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. இப்படி, இந்தியாவிலேயே பெண்கள் முன்னேற்றத்துக்கான முன்னோடித் திட்டங்களை நாம் செயல்படுத்துவ தால்தான், பெண்கள் அதிகம் வேலைக் குப் போகும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது.
பெண்கள் தலைமையேற்று நடத்தும் 4,400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 23 ஆயிரத்து 431 பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தொழில்முனைவோர்களாக ஆக்கியுள்ளோம். 13 ஆயிரத்து 473 பெண் தொழில் முனைவோர்களுக்கு 1,056 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 366 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி, மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலமாக நமது திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது! இப்படிப்பட்ட சூழலில் இந்த பெண்கள் மாநாட்டைப் பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமம் ஏற்பாடு செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பெண்களின் வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு முன்னணி!
பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தலைமைத்துவம் – திறன் மேம்பாடு – தொழில் முனைவு – கல்வி – சமூக மாற்றம் எனப் பல்வேறு முக்கியத் தலைப்புகளில் இந்தமாநாட்டில் பேசப்படவுள்ள கருத்துகள், எல்லோ ருக்கும் பயனளிக்க வேண்டும்.
கொள்கை வகுத்து, திட்டங்களாகச் செயல்படுத்தக் கூடிய கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும். சமூகத்துக்குப் பயனுள்ள கருத்துகளைச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற மாநாடுகள் எதிர்காலத் திலும் தொடர்ந்து நடந்து, தமிழ்நாடு உலகுக்கே வழிகாட்ட வேண்டும்! அதற்கு அடையாளமாக, இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ’தி இந்து’ குழுமம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்!
-இவ்வாறு தமது உரையில் முதல மைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.