திருவனந்தபுரம், ஆக. 15- குஜராத் கலவரம், காந்தியார் சுட்டுக் கொல் லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில பாடங்களை ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி கடந்த ஜூன் மாதம் அறிவித்தது இருந்தது. அப்போது பெரும் சர்ச்சையை இது கிளப்பிய நிலையில், மாநில பாடத்திட்டங்களில் இந்த பாடங்களை சேர்க்க முடிவு செய்து இருப்பதாக கேரளம் அதிர டியாக அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி தயார் செய்யும் பாடத் திட்டங்கள் பின்பற் றப்படுகின்றன. அதேபோல், மாநில அரசுகள், தங்களுக்கென தனியாக பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த நிலையில், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப் பட்ட பாடங்களை மாநில பாடத் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்து இருப்பதாக கேரள அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குஜராத் கலவரம், காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் இந்தியா உள்ளிட்ட பாடங்களை மீண்டும் மாநில பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.
இந்த பாடங்களை ஒன்றிய அரசு தனது பாடத்தித்திட்டத்தில் இருந்து அகற்றியிருந்தது. பள்ளிப் பாடப்புத்த கத்தில் இருந்து இந்த மேற்கூறிய பாடங்களை ஒன்றிய அரசு நீக்கியது தொடர்பாக பாடத்திட்டங்களை தயார் செய்யும் குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பிறகு இது குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்று அமைக்கப்பட் டது. மாநில பாடத்திட்டத்தில் குஜ ராத் கலவரம், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பாடங்களை சேர்க்க இந்த துணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
புதிய பாடப்புத்தகங்கள் இந்த பாடங்களையும் சேர்த்து தயார் செய்யப்பட்டு வருகிறது. ஓணம் விடு முறைக்கு பிறகு மாணவர்களுக்கு இந்த புதிய புத்தகங்கள் கிடைக்கும்” என்றார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தங்களது பாடத் திட் டத்தில் இருந்து குஜராத் கலவரம், முகலாயர் குறித்த சில பாடங்கள், எமெர்ஜென்சி, நக்ச லைட் இயக்கம், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு உள்ளிட்ட பல பாடங் களை நீக்குவதாக அறிவித்தது.
இது கடும் சர்ச்சையாகவும் பேசு பொருளாகவும் மாறியிருந்தது. இந்த நிலையில், தான் கேரள அரசு, ஒன்றிய க் கல்வி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப் பட்ட சில பாடங் களை மீண்டும் மாநில பாடத் திட்டத்தில் சேர்க்கப்படு வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.