ஊற்றங்கரை, ஜூலை 30– ஊற்றங்கரை – அனுமந்த தீர்த்தம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கழக சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரை மேற்கொண்ட பயணக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
தமிழ்நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலிறுத்தி கழக இளைஞரணி – மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பரப்புரை மூன்றாம் பயணக்குழுவில் பிரச்சார பயணக்கு குழு தலைவர் வழக் குரைஞர் தா. தம்பி பிரபாகரன் தலைமையில் சொற்பொழிவாளர் வழக்குரைஞர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, ஒருங்கிணைப்பாளர் கோ. வேலு, தலைமை கழக அமைப்பாளர் த..சீ. இளந்திரையன் இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழுவினர் வருகைக்கு ஊற்றங்கரை ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி தலைமை யில் மிகுந்த எழுச்சியோடு சிறப்பான வகையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. பரப்புரை பிரச்சாரக் கூட்டம்
கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை பெரியார் சிலை அருகில் பரப்புரை பயண பிரச்சாரக் கூட்டம் 14.7.2024 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக இளைஞரணி மாவட்டத் தலைவர் சீனிமுத்து இராசேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கழக தலைவர் கோ.திரா விடமணி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் பழ.பிரபு, ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், ஒன்றிய ப.க.தலைவர் இராம.சகாதேவன், ப.க.சித.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊற்றங்கரை ரவுண்டானா 4 சாலை அருகேயுள்ள தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நீட் தேர்வு ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரையின் நோக்கம் குறித்து கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி நீட் தேர்வின் மோசடிகளை விளக்கியும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் மோசடிகளை விளக்கி, ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் ஒன்றை இலக்க மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் 400 மாணவர் களும், பூஜ்யம் அல்லது எதிர் மறை மதிப்பெண்களுடன் 110 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். 2017-ஆம் ஆண்டில் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்.
மிகக் குறைந்த அல்லது ஜீரோ மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வதைக் காட்டுகிறது. அரசு பள்ளியில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் கிராமபுற ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படும் கொடுமைகளை எடுத்துக்கூறியும், ஒன்றிய அரசு நீட் தேர்விலிருந்து உடனடியாக விளக்கு அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிறப்பு ரையாற்றினார்.
ஊற்றங்கரை ஒன்றிய, நகர தி.மு.க.சார்பில் பயணக் குழுவினரை வரவேற்ற தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எக்கூர்.செல்வம், இரஜினி செல்வம், நகர பொறுப்பாளர் தீபக் (எ) பார்த்திபன், ஆகியோர் கழக துணைப்பொதுச் செயலாளர் சே. மெ.மதிவதனி மற்றும் பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், மாநில ப.க.துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மாணவர் கழக பொறுப்பாளர் ச.மணிமொழி, திமுக. தணிகை குமரன், விசிக.மாநில நிர்வாகி சா.அசோகன், விசிக. (கிழக்கு) மாவட்டச் செயலாளர் குபேந்திரன், விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்க தமிழ் சரவணன், நல்லான், சிபிஅய்(எம்) மாநில நிர்வாகி லெனின், அண்ணாமலை மற்றும் திராவிடர் கழக மாவட்டத் தணைத்தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க. துணைத்தலைவர் மு.வேடியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், செயலாளர் வி.திருமாறன், ஒன்றிய ப.க.தலைவர் ஆர்.பழனி, ஞானசேகரன், ஊற்றங்கரை ப.க. முருகேசன், மூங்கிலேரி மாதேசு, இரவிந்திரன் உள்பட தி.மு.க., வி.சி.க.,காங்கிரஸ், சிபிஅய்(எம்)., மமக உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனப் பரப்புரை பயணக் கூட்டம் அனுமந்ததீர்த்தம் பேருந்து நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பரப்புரை
பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
ஊற்றங்கரை ஒன்றிய தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எங்கூர் செல்வம், சிங்காரப்பேட்டை, ஊற்றங்கரை, அனுமந்த தீர்த்தம் மூன்று பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்று பயணக் குழுவினரை சிறப்பான வகையில் வரவேற்று சிறப்பித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, அன்பு, சுப்பிரமணி, வி.சி.க.செல்வேந்திரன், சி.பி.அய்(எம்) கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் நிகழ்ச்சியில் பெரும் திரளாக பங்கேற்றனர். கிருட்டினகிரி மாவட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சார பயணக் கூட்டம் கிருட்டினகிரி, சிங்காரப்பேட்டை, மத்தூர், சாம்பல்பட்டி, ஊற்றங்கரை, அனுமந்த தீர்த்தம் ஆகிய 6 இடங்களில் இருசக்கர வாகன பரப்புரை கூட்டம்14.7.2024 அன்று ஒரே நாளில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒரு கூட்டத்திலும், சே.மெ.மதிவதனி அய்ந்து பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்று சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.