சென்னை, ஜூலை 30-
யூனியன் வங்கியின் பிற் படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தின் திறப்பு விழா சென்னை பிராட்வேயில் உள்ள சென்னை மண்டல யூனியன் வங்கியின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது…
யூனியன் வங்கியின் பிற் படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் யூனியன் வங்கியின் சென்னை மண்டலத் தலைவரும், பொது மேலாளருமான சத்தியமான் பகரா அவர்கள் விழாவைத் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் வங்கியின் மூத்த உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நல சங்கங்களின் நிர்வாகிகள், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ.ராஜசேகர் (அய்.ஓ.பி.), அன்பு குமார் (அய்.சி.எப்), பிரிட்டோ, ஆரோக்கியராஜ் (பாங்க் ஆப் பரோடா) மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்வுக்குப் பின் செய்தியா ளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி கூறுகையில்,
இந்த சங்கத்தைப் பொறுத்தவரையில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கம் இன்றைக்கு 31 ஆம் ஆண்டில் தனது சமூக நீதி பணியைத் தொய்வின்றி செய்து கொண்டிருக்கிறது.
2005இல் யூனியன் வங்கியின் மத்திய நிர்வாகம் இந்த சங்கத் திற்கான ஓர் அலுவலகத்தை சென்னை பிராட்வே முதல் தளத்தில் தந்தார்கள். அப்போது அந்த அலுவலகத்தினை வங்கியின் அன்றைய பொது மேலாளராக இருந்த விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
சங்கத்தின் 13ஆவது மாநாடு வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் நடைபெற உள்ளதாக கூறியதோடு, தற்போது புதுப்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நல சங்கத்தின் பணிகளுக்கு மென்மேலும் ஊக்கம் தரு வதாகவும், உத்வேகம் அளிப் பதாகவும் தெரிவித்தார் இச்சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி