நீங்கள்தான் உண்மையான உரிமையாளர்கள் உங்களை வனவாசி என்று கூறி மோடி அசிங்கப்படுத்துகிறார்: ராகுல்காந்தி

3 Min Read

அரசியல்

வயநாடு, ஆக. 15- அண்மையில் கேரளா மாநிலம் வயநாடு சென்ற ராகுல் காந்தி அங்கு நடந்த கூட் டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாட் டின் உரிமையாளர்கள் யார் என அவர் பேசிய பேச்சுக்கு இந்தியா முழுவதுமின்றி உலகம் முழுவதி லும் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.

பழங்குடியினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “ஆதிவாசி என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ஆதிவாசி என்ற வார்த் தைக்கு நிலத்தின் அசல் உரிமையா ளர்கள் என்று பொருளாகும். நாம் வாழும் பூமி குறித்துக் குறிப்பிட்ட ஞானம், புரிதல் மற்றும் தொடர் பைக் கொண்டவர்கள் என்பதே இதன் அர்த்தம். ஆதிவாசி என்ற வார்த்தை நமது பழங்குடி சகோதர சகோதரிகள் தான் நாட்டின் அசல் உரிமையாளர்கள் என்பதை ஏற் றுக் கொள்வதாக இருக்கிறது.

நாட்டின் அசல் உரிமையாளர் களுக்குத் தான் நிலம் மற்றும் காடு களுக்கு முதல் உரிமை இருக்கிறது. அவர்களுக்கு அந்த உரிமையை நாம் வழங்க வேண்டும், அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

நாட்டின் உண்மையான உரிமையாளர்களாகிய உங்கள் குழந்தைகள் பொறியியல், மருத் துவம், சட்டம் என விரும்பியதைப் படிக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

அதேநேரம் காடுகளிலும் உங்க ளுக்கான உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலத்தின் உரிமையை நீங்கள் பெற வேண்டும் காட்டில் இருந்து கிடைக்கும் பொருட்களுக்கு முதல் உரிமை உங்களுக்குத் தான் இருக்க வேண் டும்.

அதேநேரம் இப்போது சிலர் ‘வனவாசி’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது இந்தி யாவின் உண்மையான உரிமையா ளர்கள் நீங்கள் தான் என்பதை மறுக்கிறது. இது உங்களைக் காட் டுக்குள் சுருக்கப் பார்க்கிறது.  வனவாசி என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் காட்டில் உள்ளவர், நீங்கள் ஒரு போதும் காட்டை விட்டு வெளி யேறக்கூடாது. அப்படி வெளியே வந்து படிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என் பதைக் காட்டுவதாக இது இருக் கிறது.

இந்த வார்த்தை வரலாற்றையும் பாரம்பரியத்தையும் சிதைக்கிறது. இந்தியாவுடன் உங்களது உறவின் மீதான தாக்குதலாக இது இருக் கிறது. எங்களைப் பொறுத்தவரை, ஆதிவாசிகள் என்பதே சரி. உங்களி டமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விடயங்கள் இருக்கிறது. 

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

 ஆனால், உண்மையில் சில நூறு ஆண்டுகளாகவே இந்த நவீன சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தான் சுற்றுச்சூழலை அழித்து, காடுகளை எரித்து, மாசுபாட்டை உருவாக்கினர்.

இப்போது திடீரென சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்கிறார்கள். ஆனால், நமது பழங்குடியினரை உலகம் பார்க்க வேண்டும். அவர் கள் 3,000_-5,000 ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்கள்.

உங்கள் வரலாற்றிலிருந்து, உங் கள் பாரம்பரியத்திலிருந்து, உங்கள் வாழ்க்கை முறையிலிருந்து நாங் கள் கற்றுக் கொள்ளப் பல விடயங் கள் இருக்கிறது. சுற்றிச்சுழல் மாசு மட்டுமின்றி ஒருவரை மதிக்க வேண்டும்.

ஒரு பிரச்சினையை எப்படிக் கையாள வேண்டும் என்பது உள்பட உங்களிடம் இருந்து கற் றுக் கொள்ளப் பல விடயங்கள் உள்ளன. உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ மனைகள், சிறந்த வேலை வாய்ப் புகள் கிடைக்க வேண்டும். 

இதற்காக உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுடன் இணைந்து பணி யாற்றத் தயாராக இருக்கிறோம்” என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *