29.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* போஜ்புரி மொழியை அரசியல் சட்ட எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்; நடிகரும் எம்.பி.யுமான ரவிசங்கரின் தனிநபர் மசோதா மக்களவையில் அறிமுகம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அக்டோபர் 2இல் புதிய கட்சி ‘ஜன் சுராஜ்’ தொடங்குகிறார், அரசியல் கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ரூ. 400 கோடி மீன்பிடி ஊழல் வழக்கில் பாஜக மேனாள் அமைச்சர்கள் இருவரின் விடுதலை மனுக்களை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்ததை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு; சி.பி.எம். எம்.பி. சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
– குடந்தை கருணா