இனமானத் தமிழா், திராவிடர் கழகத் தலைவர், அருமை நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு,
வி.ஜி.சந்தோசத்தின் அன்பு கனிந்த வாழ்த்துகள்!
29.07.2024 (இன்று), சென்னை, பெரியார் திடலில் நடைபெறவுள்ள புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சிக்கான அழைப்பு கிடைக்கப் பெற்றேன். மெத்த மகிழ்ச்சி, மிக்க நன்றி!
பாவலா் செல்வ மீனாட்சிசுந்தரம் தலைமையேற்று நிகழவுள்ள இவ்விலக்கியக் கூட்டம் சிறப்பாக அமையவும் சீா்திருத்தக் கருத்துகள் தாங்கி, சிந்தனையைக் கிளறும் விதத்திலும் அமைந்து செவிகளுக்கு விருந்தளிக்கவும் உளம் உவந்து வாழ்த்துகிறேன்!
என்றும் அன்புடன்,
டாக்டர் வி.ஜி.சந்தோசம்