தருமபுரி, ஜூலை 29- நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி,திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில்,சென்னை பெரியார் திடலில் இருந்து வருகைத் தந்த நீட் எதிர்ப்பு இருசக்கர வாக னப் பரப்புரை பயணத்தின் 5-ஆம் குழுவிற்கு தலைவராக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ்,ஒருங்கிணைப்பாளராக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை,பரப்புரையின் சிறப்பு பேச்சாளர் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட குழுவினர் தருமபுரி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் கு.சரவணன், மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன், பக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார், பக இர.கிருஷ்ணமூர்த்தி, பக அன்பரசு, தொழிலாளர் அணி தலைவர் சிசு.பாலன், தொ.செயலாளர் மாணிக்கம், பாப்பாரப்பட்டி நகர் தலைவர் சுந்தரம், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் வினோபாஜி வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ் ஆகியோர் வரவேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு பரப்புரை பயண குழுவை வரவேற்று மகிழ்ந்தனர்.
முதல் நிகழ்வாக பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில், ஜீவா கிருஷ்ணன் பக ஒன்றிய தலைவர் முன்னிலையில் நீட் எதிர்ப்பு பரப்புரை பிரச்சார நடைபெற்றது.
14-07-2024 அன்று மதியம் மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன் மற்றும் பாப்பாரப்பட்டி நகர கழகம் சார்பில் பரப்புரை பயணக்குழு தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பிறகு பாப்பாரப்பட்டி பேருந்து நிலை யத்தில் பரப்புரைக் கூட்டம் நிகழ்ந்தது.
பென்னாகரத்தில் பொதுக்குழு உறுப்பினர் கடமடை தீர்த்தகிரி தலைமையில், கோவிந்தராஜ், அழகேசன் ஆகியவர்களின் முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கும்,அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் மாலையணி வித்தும்,தோழர்களுக்கு இனிப்பு வழங்கியும் பின்பு பி.டி.ஓ அலுவலகம் எதிரில் பரப்புரை பிரச்சாரம் நடை பெற்றது.
பி.அக்ரகாரத்தில் கோழிக்கடை இராமசாமி தலைமையில், பக இரா.வெங்கடேசன் முன்னிலையில் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.
இண்டூரில் பண்டள்ளி மு.பரமசிவன் தலைமையில்,பக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார் முன்னிலையில் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.
சோகத்தூர் கூட்டு சாலையில் தருமபுரி நகரத் தலைவர் கரு.பாலன் தலைமையில் வருகைத் தந்த சிறப்பாளர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக்கு திமுக தருமபுரி ஒன்றிய செயலாளர் கடகத்தூர் சேட்டு,மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் தர்மசெல்வன் ஆகியோர் சிறப்பு செய்து தோழர்களுக்கு தேநீர் வழங்கி சிறப்பித்தனர்.
14-07-2024 அன்று இரவு பரப்புரை பயண தோழர்களுக்கு பெரியார் மன்றத்தில் இரவு உணவு மாவட்டத் தலைவர் கு.சரவணன் ஏற்பாடு செய்து சிறப்பித்தார்.
15-07-2024 அன்று காலையில் பரப்புரை பயண தோழர்களுக்கு காலை உணவு விசிக மத்திய மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன் அவர்கள் வழங்கியும், பரப்புரை இருசக்கர வாகன பயணக்குழுவை கழகக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
தருமபுரியிலுள்ள தந்தை பெரியார் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, அறிஞர் அண்ணா சிலை, கல்வி வள்ளல் காமராசர் சிலைகளுக்கு மாலையணிவித்து, தருமபுரி பிஎஸ்என்ல் அலுவலகம் முன்பு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில், மாவட்டத் தலைவர் கு.சரவணன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, விசிக மத்திய மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ் ஆகியோர் முன்னிலையில் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.
ஒட்டப்பட்டியில் கோழி தேவேந்தி ரன் தலைமையில், தொழிலாளர் அமைப் பாளர் மாணிக்கம் முன்னிலையில் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.
நல்லம்பள்ளியில் மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ் தலைமையில் பரப்புரை பயண தோழர்களுக்கு தேநீர் வழங்கி பிறகு பரப்புரை பிரச்சாரம் நடை பெற்றது.
தருமபுரி மாவட்ட எல்லை முடிவு பகுதியான தொப்பூரில் பக இர.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பக மாவட்டத் தலைவர் முன்னிலையில் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது இந்நிகழ்வு முடிந்ததும் மாநில பக அமைப்பாளர் அண்ணாதுரை பரப்புரை பயண தோழர்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் நீட் எதிர்ப்பு பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ச்சியாக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் கு.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ், மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன், பக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார், பக இர.கிருஷ்ணமூர்த்தி, பக அன்பரசு, தொழிலாளர் அணி தலைவர் சிசு.பாலன்,தொ.செயலாளர் மாணிக்கம்,பாப்பாரப்பட்டி நகர் தலைவர் சுந்தரம்,பாப்பாரப்பட்டி நகர செயலாளர் வினோபாஜி வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ் தேவேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.