தாராபுரம் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி.பிரபாகரன் – பரிமளா இல்லத்திற்கு சென்ற கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பெரியார் பிஞ்சுகள் அதியன் தீரா, வேள்பாரி ஆகியோர் இணைந்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினர். குழந்தைகளிடம் அவர்களது படிப்பினைக் குறித்து கேட்டறிந்து குழந்தைகளுக்கு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார். உடன் மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், வழக்குரைஞர் நா.சக்திவேல், மா.தங்கவேல், மா.சிவக்குமார், கோரிகடவு ச.திராவிடச் செல்வன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (உடுமலைப்பேட்டை 28-07-2024)