கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் சாறின் எடை 236 கிராம் வரும். கேரட் சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.
நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்தால், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும்.
கேரட் சாறு குடிப்பதன் மூலம் புற்றுநோயை புறம் தள்ளலாம்.
இதனை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்துள்ள இதய தசைகள் மிருதுவாகும்.
இதிலுள்ள கரோட்டீனாய்டு சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.
நாள்தோறும் ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்து வந்தால் சர்க்கரை நோயை தடுப்பதுடன், உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நாள்தோறும் ஒரு டம்ளர் கேரட் சாறு குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்படும்.
புற்றைப் புறந்தள்ளும் கேரட்
Leave a comment