ஆவடி, ஆக.16- ஆவடி மாவட்ட திரா விடர் கழகம் வேப்பம்பட்டு- திருநின்ற வூர் பகுதி சார்பில் 11.8.2023 அன்று மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம் திருநின்றவூர் காந்தி சிலை அருகில் ஆவடி புதிய காலம் கலைக்குழு தோழர் வ.மதிவாண னின் புரட்சி பாடல்களுடன் துவங்கியது.
திருநின்றவூர் பகுதி கழக தலைவர் அ.அருண் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.கலை வேந்தன் வரவேற்புரையுடன் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், இணைச் செயலாளர் உடுமலை வடிவேல், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், வேப்பம்பட்டு பகுதி தலைவர் பட்டாளம் பன்னீர்செல்வம், செயலாளர் சிவ.இரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலையில் மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் உரையாற்றிய பின் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில்தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை.அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோ தரன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், பெரியார் பெருந்தொண் டர் அ.வெ.நடராசன், ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பூவிருந்தவல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முருகன், பூவிருந்த வல்லி ஒன்றிய செயலாளர்
சு.வெங்கடேசன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் அன்புச் செல்வி, முகப்பேர் முரளி, மாவட்ட இளைஞரணி செய லாளர் ஏ.கண்ணன், பூவிருந்தவல்லி பகுதி தோழர்கள் பாலச்சந்திரன், சந் தோஷ், சுகுமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி, திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், திருநின்றவூர் நகர தி.மு.க அவைத் தலைவர் அன்பழகன் திருநின்றவூர் நகர துணை செயலாளர் கவுன்சிலர் கமலக்கண்ணன் சோமங்கலம் இன மாறன் (எ) பாலமுரளி, ஆவடி நகர துணைத் தலைவர் சி.வச்சிரவேலு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன், துணைச் செய லாளர் சுந்தர்ராஜன், மகளிர் பாசறை ஜெயந்தி, மேனாம்பேடு சிவகுமார் மற் றும் தோழர்கள் செல்வன், பிரபாகரன், இ. சுரேசுகுமார், சங்கரி, அரவிந்த், பிரவீன், கார்த்திக்,வசந்தி, பிரேம் குமார், துரை விஜயகுமார், ந.யாகீசுவரன், செல் வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் நகர செயலாளர் கீதா இராமதுரை நன்றியுரையாற்றினார்.