கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.7.2024

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிப்பால் மக்கள் கொந்தளிப்பு – பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்: மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்; மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
* பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நிட்டி ஆயோக் கூட்டத்தை பத்து மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு.

* நிட்டி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் தடுத்ததால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வெளிநடப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் பரபரப்பு நிகழ்வு.

* நிட்டி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

* விரைவில் நடைபெற உள்ள மகாராட்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எமது கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – சரத் பவார் நம்பிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராட்டிராவில் அஜித் அணியில் இருந்து சரத் அணிக்கு திரும்பிய முஸ்லிம் தலைவர்: ‘பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாக்களிக்கவில்லை’ என தெரிவித்தார்.
* ’தெரியாமல் நடந்து விட்டது’ என்கிறது காவல்துறை. ஹரித்வாரில், கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள மசூதிகள் மற்றும் மசார்கள், பெரிய வெள்ளைத் தாள் களை கொண்டு பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன. பின்னர் அகற்றப்பட்டன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 10 ஆண்டுகளாக, நிட்டி ஆயோக் ’அவதார’ பிரதமருக்கு ‘ஜால்ரா’ அடித்துக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

தி டெலிகிராப்:

* இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 36% வளர்ச்சி குன்றியவர்கள் என மோடி அரசு ஒப்புதல்; காலை உணவையும் சேர்த்து மதிய உணவை நீட்டித்ததை நிராகரித்த அதே மோடி அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பு என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *